பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

333


குழாஅங் கொண்ட குருதி அம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினும், அன்னோ!

என்னா வதுகொல் தானே - நன்னல் வேலிஇப் பணைநல் லூரே! 20

‘கருங்கண் கொண்ட, நெருங்கிய வெம்மையான மார்பகங் களும், கண்டார் மயங்கும் நோக்கும் உடைய இப் பெண்ணினை, விரும்பினோர் பெரிதும் இரங்கத் தக்கவர்களே! இவள் தமையன்மார், 'தமக்கு ஒப்பானவர் அன்றிப் பிறருக்குத் தருவதில்லை என்ற உறுதிகொண்டு, பிறர் வந்து பெரும் பொருள் தரவும் மறுத்தனர். அவர் சினந்து எழத், தாமும் கேடயந் தாங்கி, வாள் கையேந்திப் போர்க்கும் எழுந்தனர். இடைவிடாது நேரும் போர்களால் கேடயமும் வாளும் தாங்கியும், புலாலும் குருதியும் நாறும் கழுவாத தலையுடைய நெடுவேல் ஏந்தியும் போரிடும் வீரர்கள் இவ்வூரினுள் நிறைந்துள்ளனர். எனினும், படையெடுத்து வந்தவரோ வேந்தர் பலர். அவர் மறவர் வந்து பாடியிட்டுத் தங்குதலால் சுற்றுப்புற நகரெல்லாம் பாழ்பட்டன. ஐயோ! பருத்தி வேலி சூழ்ந்த இப் பணை நல்லூர் என்னாகுமோ? அறிந்திலனே!

346. பாழ் செய்யும் இவள் நலனே!

பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி. திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

('இவள் நலன் பெரும் பாழ் செய்யும் என்று கூறுகின்றது செய்யுள்; இது பலருக்கும் மகளைத் தர மறுத்துப் போரை எதிர்நோக்கியிருந்த தலைவனது ஊரைப் பற்றி இரங்கிக் கூறியது ஆகும்) . .

பிற.ளே பால் என மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்; ஒள்வேல் நல்லன் அதுவாய் ஆகுதல்அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் - 5. பேணுநர்ப் பெறாஅது விளியும் . புன்தலைப் பெரும்பாழ் செய்யும் இவள் நலனே. (1. ஒல்வேன் அல்லன் - வேறு பாடம்)

“நினக்குத் தெரியாது. இப் பாலையும் உண்க என இன்றும் தன் மகளுக்கு ஊட்டுபவளாதலின், இவள் தாயும் இவள்பால் பெருவிருப்பம் உடையவளன்றி, அறிவினள் அல்லள். வல்லாண்மை உடையவனான இவள் தமையனோ, சிறந்த படைப்