பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

புறநானூறு - மூலமும் உரையும்


அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப், பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறியேனே, குறுமுலைக்கு அலமரும் பால்ஆர் வெண்மறி, நரைமுக ஆகவொடு, உகளும், சென.

ввё в а 8 8 8 а а а в в ее ва ё ? в 8 கன்றுபல கெழீஇய 20

கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், என ஒருவனை உடையேன் மன்னே, யானே, அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?

சேவல் கூவ எழுந்து, பனியிலே நனைந்தவனாகப், புலர் காலை வேளையிலே, என் கிணையை மீட்டி, அவன் நகரின் தலை வாயிலிலே நின்று, அவன் பகடுகள் பலவும் வாழ்த்தி, அவன் புகழைப் பாடினேன். என் வறுமையும், ஊன் புலந்து தோன்றும் உடல்நலிவும் தீர, அவன்பாற் பரிசில் வேண்டி, அவன் நகருள்ளும் சென்றேன். தேன் போன்ற கள்ளின் தெளிவை மடாரிலே வார்த்து உண்ணவும், பாம்புத்தோல் போன்றும், மூங்கிலின் உட்புறத்தே தோன்றுவது போன்றும் வெள்ளையான, மெல்லிய இழைவரிசை அறியாவாறு, நெய்யப்பட்ட ஒள்ளிய பூவேலை செய்யப்பட்டது மான ஆடையை உடுத்தவனாக, நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பும், அத்தகைய அழகிய உந்தியும் உடைய கற்புடைய மடந்தையான மனைவி புறத்தே அணைத்துக் கிடக்க, மெல்லணையிலே அவன் உறங்கிக் கொண்டிருந்தான். என் குரல் கேட்டு வந்து என்னைப் பார்த்தான். என் வறுமை நீங்கிற்று. பழைய வாழ்வை அழித்துப் புதுவாழ்வு பெற்றவனேபோல உருமாறினேன். ஆட்டுக்குட்டியும் குரங்குக் குட்டியும் கலந்து விளையாடும் மூங்கில் செறிந்த கானக நாடனாகிய அவியனை எனக்குத் தலைவனாக உடையே னாயினேன். அவன் தன் கடமையினின்றும் தவறான்; வெள்ளி நிலைபிறழ, நாடே பஞ்சத்தால் வாடினும், இனி யான் வருந்தேன்!

384. நெல் என்னாம்! பொன் என்னாம்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான். திணை: பாடாண். துறை: கையறு நிலை.

(கரும்பனூர் கிழான் வழங்கிய கொடையை நினைந்து, மீண்டும் அவனை நாடிச் சென்றவர், அவன் கோயில் வாயிலிடத்தே நின்று, இவ்வாறு போற்றிப் பாடுகின்றனர்)

மென் பாலான் உடன் அணைஇ, . -

வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை

அறைக் கரும்பின் பூ அருந்தும், வன் பாலான் கருங்கால் வரகின்