பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

375


அங்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து, விழவின் றாயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து,

"................... கிணையேம் பெரும! 10

நெல்என்னாம், பொன்என்னாம், கனற்றக் கொண்ட நறவு என்னாம், ، ، ، ، ، மனை என்னா அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை 15 மண் நாணப் புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை, யான்எவன் தொலைவதை, அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட 20 உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும், - வந்த வைகல் அல்லது, - சென்ற எல்லைச் செலவுஅறியேனே! (1. அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் - பாடம் 2. கரும்பனூரன் கிளையேம்; துணையேம் - வேறுபாடம்)

வயல்களிலே மீனுண்டு மேய்ந்து வஞ்சிமரக் கிளையிலே தங்கி உறங்கும் நாரையானது, முற்றிய கரும்பின் பூந்தாதுகளைத்

தின்று கொண்டிருக்கும் வரகினை அறுத்த புன்செய் நிலத்திலே,

குறும்பூழ் எலியைப் பிடிக்கச் செய்யும் ஆரவாரத்தால், குறுமுயல்கள் வெருவி இருப்பை மரத்துக் கொம்பிலே தாவ, ஆங்குள்ள பூக்கள் உதிரும். விழா நாட்கள் அல்லவேனும், உழவரது உண்கலத்திலே கெளிற்றுமீன் கறியும் கள்ளும்

நிறைந்திருக்கும். அத்தகைய நாட்டிற்கு உரியவனான

கரும்பனூரனுக்கு வேண்டியவர் யாங்கள். நெல் என்ன, பொன் என்ன, கள் என்ன, எம்மனையில் இல்லாத இவையுடன் பலவும் யாம் வேண்டத் தட்டாது அவன் குறைவறத் தந்து எம்மை ஆதரித்தான். ஊன்மிகுதியான கொழுத்த உணவிலே, பிறர் நாணுமாறு, புகழை விரும்பிய அவன். நீரும் நாணுமாறு, நீரினும் மிகுதியாக நெய்யினைப் பெய்தான். எம்மைக் காத்த எம் தலைவன் அவன் ஒருவனே. அவனை, யாம் இனி வருந்தித் தொலைவதும் இல்லை. இனி, வறட்சி உண்டாக்கும் பொருட்டு வெள்ளியும் பிறழ்க; அது பற்றி யாம் கவலையுறுவதுமில்லை. உண்ட