பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

புறநானூறு - மூலமும் உரையும்


நன்கலத்தை நீர் பெய்து கழுவவும், தின்ற பல்லிடையே சிக்கிய ஊனைத் தோண்டவுமாகக் கழிந்து சென்ற நாட்கள்தாம் எவ்வளவினவோ? அவற்றை யாமும் அறியோமே!

385. காவிரி அணையும் படப்பை!

பாடியவர்:கல்லாடனார். பாடப்பட்டோன். அம்பர் கிழான் அருவந்தை. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

('நல் அருவந்தை, வேங்கட விறல்வரைப் பட்ட, ஒங்கல் வானத்து உறையினும் பலவாக வாழியர்' என் வாழ்த்துகின்றார் புலவர். அவனுடைய வள்ளன்மைச் செவ்வியையும் போற்றுகின்றார்) - -

வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியல் பகடுபல வாழ்த்தித் தன்கடைத் தோன்றினும் இலனே, பிறன் கடை, அகன்கண் தடாரிப்பாடுகேட்டு அருளி, வறன்யான் நீங்கல் வேண்டி, என்அரை - 5

'நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே, காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன். நல்அருவந்தை, வாழியர், புல்லிய 10 வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

(. நீலநிறச் சிதாஅர் களைந்து - வேறுபாடம்)

புலர்காலை வேளையிலே, அவன் வீட்டு வாயிலுக்குக் கூட யான் சென்று நின்று அறியேன். பிறர் வீட்டின் வாயிலிலே நின்று பாடிய என் கடாரிக்குரல் கேட்டு, அருளோடு அவனே என்னை நாடிவந்தான். வந்து, யான் வறுமையினின்றும் நீங்குதலை விரும்பி, என் கந்தலைக் களைந்து வெள்ளையாடை உடுப்பித்து, என் பசியையும் போக்கினான். காவிரி பாயும் தாழ்ந்த நிலப் பாங்கிலுள்ள தோட்டங்களும், செந்நெற் கழனிகளும் உடைய அம்பர் நகருக்கு உரியவனான நல்ல அருவந்தை அவனே! வேங்கடமலையிலே தங்கி வீழ்ந்த மழைத்துளியினும் பல ஆண்டுகள், அவன் வாழ்வானாக!