பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

புறநானூறு - மூலமும் உரையும்


என்று கொள்ளலாம். “நின் அருங்கல வெறுக்கை, அவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக, அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை தண்கமழ் கோதை புனைய, வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே' என்று (புறம் 146) கூறும் பெருமிதங் கொண்டவர் இவர். சேரனுடன், அவன் அமைச்சராக விளங்கினாலும், தகடுர்ப் பெரும் போரில் வீழ்ந்த அதியனின் மறமேம்பாட்டையும், கொடைச் சிறப்பையும், மனிதாபி மானத்தையும் வியந்து பாடிப் போற்றவும் இவர் தயங்கியதில்லை. கூற்றுவன் அதியனுயிரைக் கொண்ட செயலானது, 'வீழ்குடி உழவன் வித்து உண்டாங்கு பேதைமை மிகுந்த செயல் என்று (புறம் 230) கூறுகின்றார் இவர் அதியனின் களமேம்பாடு இதனால் நன்கு விளங்கும். .

அள்ளுர் நன்முல்லையார் 306

குறுந்தொகையுள் பத்துப் பாக்களும், அகநானூற்று 46 ஆம் செய்யுளும் இவர் பாடியனவாம். பாண்டிநாட்டு அள்ளுரினர் இவர். ‘நன்முல்லை’ என்னும் இவரது பெயரால் இவரோர் பெண்பாற் புலவர் என்பது விளங்கும். அள்ளுர் கொற்றச் செழியனுக்கு உரியதாக, மிக்க வளமுடன் அந் நாளில் விளங்கியது. 'அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லவோ எனத் தலைவனைப் பற்றித் தலைவி கூறுவதாக (குறு.93) இவர் பாடியுள்ளது பெரிதும் செப்பமுடையதாகும். 'கட்கின் புதுமலர் முட்பயந்தாங்கு, இனிய செய்த நம் காதலர்; இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே (குறு202) எனவும் நயமுற இவர் கூறுவர். இச் செய்யுள் 'தன் காதலனுக்கு வெற்றிச் சிறப்பையும் வேந்து அளிக்கும் செல்வத்தையும் தருதற்குரிய போர் வருகவென்று, ஒரு தலைவி, தன் முன்னோரின் நடுக்கல்லைத் தொழுது பரவுகின்றாள்' எனக் கூறுகின்றது. அக் கால மறக்குடி மகளின் மறச்செவ்வி நிரம்பிய உள்ளத்தைக் காட்டும் சிறந்த விளக்கம் இதுவாகும்; இவரது நாட்டுப் பற்றையும் இது விளக்கும். ஆடுதுறை மாசாத்தனார் 227

வடவெள்ளாற்றங் கரையிலிருந்த ஆடுதுறை யினர் இவர். மாசாத்தன்' என்னும் பெயர், இவரை வணிகச் சாத்தினர் எனவும், ஐயனார் பெயரைக் கொண்டவர் எனவும் காட்டும். இச் செய்யுள் ஒன்றே இவர் பாடியதாகக் கிடைத்துள்ளது. இதன்கண், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் சாவுக்கு இரங்கியவ ராகக் கூற்றின் பேதைமைச் செயலை இகழ்வார் போல, நனி பேதையே நயனில் கூற்றம். இனியார் மற்று நின் பசிதீர்ப் போரே? என இவர் பாடியுள்ளனர். அவனால் ஆதரிக்கப் பெற்றவர் இவர் ஆகலாம்.