பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

423


திருக்குட்டுவன் முதலியோர் ஆவர். வஞ்சப் புகழ்ச்சியாகச் செய்யுள் செய்வதில் வல்லவர் இவர். ‘புலி துஞ்சு வியன் புலத்தற்றே, வலி துஞ்சு தடக்கை அவனுடை நாடே எனவும், 'மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே, தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல் அதனினும் இலமே என நயமாகப் பாடியவர் இவர் நின் பகைவர், நின்னைக் காணின் புறங் கொடுத்தலால் ஊறு அறியா மெய் யாக்கையோடு கண்ணுக்கு இனியர், செவிக்கு இன்னார்; நீயோ வாள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை, கட்கு இன்னாய்’ என உவமித்துப் பாடும் புலமைத்திறம் பெரிதும் போற்றற்கு உரியதாகும். மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம், நல்லறிவு உடையோர் நல்குரவு உள்ளுதும் எனக் கூறும் இவர், அத்தகைய பண்பினைப் பேணி வாழ்ந்தவர் எனலாம். சோழிய ஏனாதி திருக்குட்டுவனைப் பாடிப் பரிசில் வேண்ட அவன் ஒரு வெஞ்சின வேழத்தை நல்கினனாம்; அதற்கு அஞ்சி இவர் அதனைப் பெறாது மறுத்தனராம்; அவனோ அது சிறிதென உணர்ந்தனர்போலும் என நாணினவனாகப் பிறிதுமோர் பெருங்களிறு தந்தனனாம்; இவ்வாறு யானை களையே அவன் தருதலால், எத்துணை வறுமை வரினும், அவனிடத்தே பரிசில் கேட்டு யான் செல்லேன்' என்கிறார் இவர். அவனது கொடையைப் பழிப்பதுபோல, அவனது கொடை மடத்தை வியந்து பாடிய செய்யுள் இதுவாகும் (394)

சங்க வருணர் என்னும் நாகரியர் 360

இவர் பாடியுள்ள இச் செய்யுள் பெருங்காஞ்சித் துறைச் செய்யுட்கள் பலவற்றுள்ளும் சிறந்த பொருட்செறிவு உடைய தாகும். தந்துமாறன் என்னும் தலைவன் ஒருவனுக்கு உலகின் நிலையர்மையை எடுத்துக்கூறிப் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பிப் புகழோடு வாழும் சிறந்த அறத்தையும் இவர் உணர்த்துகின்றார். “நாகரியர் என்னும் சொல், இவரது நாட்டையும், 'சங்க வருணர்’ என்பது இவரது மேனி வண்ணத்தையும் காட்டுவன. நாகர் நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்றுப் புலமை பெற்ற ஒரு தவநெறிச் செல்வர் இவர் எனலாம். சாத்தந்தையார் 80,81,82, 287

‘சாத்தந்தை' என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுவது ஆகும். புகழ்பெற்ற அச் சாத்தனார் யாவரோ அறியோம். கண்ணஞ் சேந்தனாரின் தந்தை இவர் என்றும் கூறுவர். சோழன் போர்வைக் கோப் பெருநற்கிள்ளியைப் பாடியவர் இவர். இவருடைய புறநானூற்று 80, 81, 82 ஆம் செய்யுட்கள் மற்போர்க் காட்சியை விளக்குவனவாகும். ஒரு மறவன் கூறும் நீண்மொழியாக