பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

புறநானூறு - மூலமும் உரையும்


தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 326

இவரது பெயர் பூட்கொல்லனார் எனவும் வழங்கும். பாண்டி நாட்டுத் திருத்தங்கால் இவரது ஊர்; 'பொற் கொல்லன்' தொழிலால் வந்த பெயர். அகநானூற்று 48,108, 355 குறுந்தொகை 217 நற்றிணை 313 ஆம் செய்யுட்களும் இவர் பாடியனவாக விளங்கும். இனி, 'பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப என வரும் இவர் வாக்கு நயம் கொண்டு (நற்.313) இவருக்குப் பொற்கொல்லன் எனப் பெயர் வந்ததாகலாம் எனவும் கொள்ளலாம். ஒரு மறக்குடியின் இல்லற ஒழுக்கம் எவ்வாறு விளங்கிற்று என்பதனை எடுத்துக் காட்டுவதாக இவரது செய்யுள் அமைந்துள்ளது. -

தாமப்பல் கண்ணனார் 43

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் இவரும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தான் அவன்.அவனைச் சோழன் மகனல்லை என இவர் கூறவும், அவன் நாணியிருந்தான். அது கண்டு, அவன் பண்பைப் போற்றுவாராகப் பாடிய செய்யுள் இது. இது இவரைப் பார்ப்பார் எனக் காட்டுகின்றது. தாமப்பல் என்பது ஊர்ப்பெயர் ஆகலாம். தாயங் கண்ணனார் 356, 367

எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் எனவும் இவர் பெயர் வழங்கும். அகநானூற்றுள் 7 செய்யுட்களையும், குறுந் தொகையுள் 319 ஆம் செய்யுளையும், நற்றிணையுள் 219 ஆம் செய்யுளையும் செய்தவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வள்ளன்மையை இவர் பாடியுள்ளனர். காடு வாழ்த்தாக அமைந்துள்ள செய்யுள் (326) நிலையாமைப் பொருளை மிகவும் திட்பமாக விளக்குவதாகும்.

தாயங் கண்ணியார் 250

கைம்மை நோன்பு பற்றிய விளக்கமாக இச் செய்யுள் விளங்குகின்றது.

திருத்தாமனார் 398

சேரமான் வஞ்சன் என்பானது புகழை வியந்து போற்றி இவர் பாடியுள்ளார். வேறு குறிப்பு ஏதும் தெரிந்திலது. தும்பிசேர் கீரனார் 249

இச் செய்யுளோடு குறுந்தொகையின் 61, 315, 316 320, 392; 'நற்றிணையின் 277 செய்யுளையும் பாடியவர் இவர். இவர் கீரர்’ குடியைச் சோந்தவர். குறுந்தொகை 392 ஆம் செய்யுள்