பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

33


வேந்து தந்த பணி திறையாற்

சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், ஓங்கு கொல்லியோர், அடு பொருந! வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்! - வாழிய, பெரும நின் வரம்பில் படைப்பே 30

நிற் பாடிய அலங்கு செந்நாப்

பிற்பிறர் இசை நுவலாமை,

ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ

மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே

புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு, வந்து, 35

இனிது காண்டிசின், பெரும! முனிவிலை,

வேறுபுலத்து இறுக்கும் தானையொடு

சோறுபட நடத்தி, நீ துஞ்சா மாறே

சேரமானின் ஆட்சியிலே, கொல்லுங் களிறும் இடையிலே வாளில்லாதவருக்கு இடையூறு விளைவியாது. அசைந்த கையும், நிமிர்ந்த நடையும், ஒலிக்கும் மணியும், உயர்ந்த கோடும், பிறைவடிவாக இடப்பட்ட மத்தகமும், சினந்த நோக்கும், பரந்த அடியும், பாரித்த கழுத்தும், தேனி மொய்க்கும் மதநீரும், புண்வழலை வடியும் பெருந்தலையும் உடைய அந்த இளங்களிறு, தான் கட்டப்பெற்ற கம்பத்திலே பொருந்தி நின்ற நிலையிலேயே அசைந்து கொண்டிருக்கும். அதனருகே, வெண்கொற்றக் குடை நிழல் செய்யும். அது கண்ட வாள் இலாதோர் அக் குடையே காவலாக அதன்கீழ்ச் சென்று உறங்குவர். சுற்றிக் கரும்பாற் கட்டப்பட்டுச் செந்நெற் கதிரால் வேயப்பட்ட பாடிவீடுகள் அழகுடன் விளங்கும். அரிசி குற்றுவாரின் உலக்கையொலி அங்கே முழங்கும். பொன்னாற் செய்த தும்பை மாலையணிந்து, பனந் தோட்டைச் செருகிச், சினத்துடன் வீரர் வெறியாடுவர். அக் குரவையொலி கடலொலி போலக் கேட்கும். அத்தகைய அஞ்சா மறவர் படையினை உடையவன் சேரன். இவன் வன்மை கேட்டுப் பகைவர் தாமே அஞ்சுவர். ஆதலின், பாசறைக்குக் காவலுங் கிடையாது. எங்கும் அது பரந்தும் விளங்கும். இத்தகைய பாசறையுடையவனைக், "காவலனே! மாற்றரசர் தந்த திறையால் தம்மை வந்தடைந்த சுற்றத்தாரை வாழ்விக்கும் கொல்லி மலையோரின் போர்மறவனே! யானை நோக்கும் வெற்றி விருப்பும் உடைய சேய் என்பானே! வாழ்க, நீ பெருமானே! நின் செல்வம் எல்லையற்றது. நின்னைப் பாடிய நா பிறரை ஒருபோதும் பாடாது எனும்படி வரையாது வழங்கும் பெருமையுடையவன் நீ நின் நாடு மிக்க பெருமை உடையது எனக் கேட்டு நின்னை நாடி வந்தேன்; நின்னையும் கண்டேன்! பெருமானே! முயற்சியோடு பகைவரை