பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

439


கொண்டதாகும். அவனை வாழ்த்தும் வாழ்த்தில் இவரது புலமைத் திறம் தெற்றெனப் புலப்படும் (புறம்.128).

பேரெயின் முறுவலார் 229

முறுவலார் என்னும் இவர், பேரெயில் என்னும் சோழ நாட்டு மூதுரைச் சேர்ந்தவர் ஆவர். எப்போதும் முறுவலோடு திகழ்ந்தமை காரணமாக முறுவலார் எனப் பெற்றனர் ஆகலாம். இவர் நம்பி நெடுஞ்செழியனைப் பாடிய இச் செய்யுளுள் அவனது

இறப்பால் நொந்து போயின தம் மனநிலையை நன்கு

காட்டுகின்றனர். அவனுடைய மேம்பாடுகள் அனைத்தும் நம் கண்முன் நிழலாடும்படி செய்து விடுகின்றார். இவருடைய குறுந்தொகைச் செய்யுள் (17) காமம் காழ்க்கொளின் ஆடவர் எதற்கும் துணிவர் என்பதனை நன்றாக விளக்குவதாகும்.

பொத்தியார் 217, 220, 221, 222, 223

கோப்பெருஞ் சோழனின் உயிர்த்தோழர்களுள் இவரும் ஒருவர். பிசிராந்தையின் நட்பை வியந்து பாடிய செய்யுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். சோழனை இழந்த உறையூர் மன்றத்தைக் கண்டதும் கண் கலங்கி நின்றார் இவர். 'மகபெற்ற பின் வா” எனச் சோழனால் இருத்தப் பெற்று, அவ்வாறே சென்று பின்னர் வந்து வடக்கிருந்து உயிர்துறந்த சிறப்பினர் இவர். சோழனின் நடுகல்லைக் கண்டு இவர் பாடிய கையறுநிலைச் செய்யுட்கள் கன்மனத்தையும் கனிவிப்பன.

பொய்கையார் 48, 49

இவற்றுடன், நற்றினை 18 ஆம் செய்யுளும் இவர் பெயரான்

வழங்கும். இவர் சேரமான் கணைக்கால் இரும்பொறையின்

நண்பராக விளங்கியவர். மூவனின் வலியை அழித்த அவன் மறச்செயலை இவர் குறிப்பிடுகின்றார் (நற்.18) சேரமான் கோக்கோதை மார்பனைப் பாடிய செய்யுட்கள் இவை. இவை அவனது சிறப்பையும் அவன் நாட்டு வளத்தையும் உரைக்கின்றன. இவர் ஊர் தொண்டி என்பது, ‘கள் நாறும்மே கானலம் தொண்டி, அஃது எம் ஊரே என்பதனால் அறியப்படும் (புறம்:48), சோழன் செங்கணானால் சிறைப்படுத்தப் பெற்றிருந்த கணைக்காலிரும் பொறையை மீட்கக் கருதி அவன்மேற் களவழி நாற்பது என்னும் நூலைச் செய்தவர். ஆனால், அச் சேரமானோ உண்ணும் நீர் கேட்டுக், காலம் தாழ்த்திப் பெற்றபோது, உண்ணாது உயிர் துறந்தவன். அஃதறிந்து ஆராத் துயரத்தில் ஆழ்ந்தவர் இவர் என்பர். இவர் பாடியனவாக யாப்பருங்கல விருத்தி, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுட் சில சூத்திரங்களும் காணப் பெறுகின்றன. பொய்கைப் புறமாக இவரது இல்லமிருந்தது பற்றி,