பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HoSlyyité EsÅssr 457

அதனால் இவனையும் அவர்கள் காலத்தினனாகக் கருதலாம். இவரது அகநானூற்றுச் செய்யுள் (அகம் -13) வள்வாய் அம்பிற் கோடைப் பொருநன் பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி பற்றிக் குறிப்பிடுகின்றது. இதனால், இவன் பெயரைப் பண்ணி என்று கருதுதலும் பொருந்தும் எனலாம். இருவரையும் வேறானவராகக் கொள்ளலும் கூடும். இஃது ஆய்தற்கு உரியது.

கண்டீரக் கோப்பெருநள்ளி - 148 - 59 151, 158

இவன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். தோட்டி மலைக்கும் அதனைச் சார்ந்த பகுதிகட்கும் உரியவனாக விளங்கியவன். இவனைப் பாடியவர்கள் வன்பரணரும், பெருந்தலைச் சாத்தனாரும் ஆவர். மற்றும் கபிலர், காக்கை பாடினியார், நச்செள்ளையார், பரணர், பெருஞ்சித்திரனார் ஆகியோராலும் பாடப் பெற்றவன். உள்ளி வருநர் உலைவு நனிதீரத் தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக், கொள்ளார் ஒட்டிய நள்ளி (158) என இவன் சிறப்புப் போற்றப்படுகின்றது. 150 ஆவது செய்யுள் இவனை மிகமிக அருமையாக நமக்கு ஒவியப்படுத்திக் காட்டுகின்றது. காட்டிடத்தேயே இரவலர்க்கு உணவும், மார்பிற் கிடந்த ஆரமும், முன்கைக் கடகமும் தந்து உபசரித்தவன் இவன். "எந் நாடோ?” என நாடும் சொல்லான்; யாரீரோ?' எனப் பேருஞ் சொல்லான்” என்று இவனது சிறந்த பண்பை வியக்கின்றார் புலவர். புகழ் வேண்டாத பெருங்கொடையாளி இவன்.

கண்ணகி - 143 - 7

இவள் வையாவிக் கோமான் பேகனின் மனைவியாவாள். அவனால் ஒரு காலத்தே துறக்கப்பட்டு, அதனால் பெரிதும் வாடி நலிந்தவள். இவள் நலிவைப் போக்குதற்கு உதவியவர்கள், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுார் கிழார் போன்ற பெருந்தமிழ்ச் சான்றோர்களாவர். ஒரு வள்ளலது இல்லத்து உறவில் களங்கம் ஏற்பட்ட போது, புலவர்கள் அதனைப் போக்கப் பெரும்பாடுபட்டனர் என்று காட்டுவதற்காகவே இச் செய்யுட்களைப் புறநானூற்றுள் தொகுத்தனர் போலும் நின்னும் நின்மலையும் பாட, இன்னாது, இகுத்த கண்ணிர் நிறுத்தல் செல்லாள்; முலையகம் நனைப்ப விம்மி, குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே' என்று, இந்த அம்மையின் பிரிவுத்துயரத்தை ஒவியமாக்கிக் காட்டுகின்றார் கபிலர். கலிமற் கலாவங் கால்குவித்தன்ன, ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளிஇத், தண்கமழ் கோதை புனைய, வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே' என்று கூறும் அரிசில்கிழார், இவள் நீராடாதும் பூச்சூடாதும் பொலிவிழந்து வாடியிருந்த நிலையை எடுத்துக்