பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

புறநானூறு - மூலமும் உரையும்


கூறுகின்றார். நெய்யோடு துறந்த மையிருங் கூந்தல்' என்று கூறுகின்றார் நெருங்குன்றுார் கிழார். இவ்வாறு கற்பறம் பேணிச் சான்றோர் பேகனது மனத்தை மாற்ற, மீண்டும் அவனைப் பெற்று மகிழ்ந்த பெருமாட்டி இவள்,

கந்தன் - 330

கருவூர்க் கதப்பிள்ளை என்னுஞ் சான்றோர், நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய இச் செய்யுளில் இவனைப் பற்றி பாடுகின்றார்."தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற்பொருநன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன், துப்பெதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; வல்வேற் கந்தன்' என்கிறார். இதனால், இவனே நாஞ்சிற் பொருநன் என்னும் நாஞ்சில் வள்ளுவன் என்று கொள்வார் சிலர். சிலரோ இவனை அவனது முன்னோன் எனக் கருதுவர்.

கபிலர் - 53, 126, 174

இவர் பெரும்புலவருள் ஒருவர்; இவர் வரலாற்றின் சிறு குறிப்பைப் பாடினோர் வரலாற்றுப் பகுதியிற் காணலாம். அச் செய்யுட்களுள், பொருந்தில் இளஞ்சீரனார் என்பவர், தாம் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய செய்யுளில் செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என (53) இவரைப் போற்றுகின்றனர். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்கிறார் நப்பசலையார் (126); 'பொய்யா நாவிற் கபிலன் (74), எனவும் அவர் மீண்டும் போற்றுகின்றார். இவ்வாறு பிற்காலப் புலவரும் போற்றிய சிறப்பினைப் பெற்ற தமிழ்ச் சான்றோர் இவர் ஆவர்.

கரிகால் வளவன் - 7, 65 - 6, 224

சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் தலைப்பினைக் காண்க.

கம்பனூர் கிழான் - 381, 384

இவன் வேங்கடமலை நாட்டைச் சார்ந்தவன். புறத்திணை நன்னாகனாராற் பாடப் பெற்ற சிறப்பினன். ஒய்மான் நல்லியக்கோடன் காலத்தவன். இரவலரை, நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, மண்நாணப் புகழ் வேட்டு நீர்நாண நெய் வழங்கிப் புரந்தோன் இவன் ஆவன் (384). காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி - 44 - 6, 47

இவன் சோழர் குடியினன், உறையூரில் இருந்தவன்; சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன். இவனை நெடுங்கிள்ளி’ எனவும்