பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

35


சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நெடிய வெருவரு பறந்தலை 20

வேளை வெண்பூக்கறிக்கும் ஆளில் அத்தம் ஆகிய காடே.

கம்பத்திலே கட்டப்பட்டிருந்த நின் யானைகள், கட்டினை அறுத்துச் சென்று, தாமாகவே பகைவரது காவல் நீர்த்துறை களைக் கலக்கி அழிக்கும். கூர்மையான அம்புகளும், வளைந்த வில்லும் கொண்டு முருகனது கூளிப்படைபோல வருபவர், நின் மறவர். தம்மால் கொள்ளுமட்டும் பகைவர் விளைவயலுள் புகுந்து அவர் கொள்ளையிட்டபின், எஞ்சிச் சிதறிக்கிடக்கும் தானியங் களை, மாற்றார் பதற்றத்துடன் கொண்டு செல்வர். அவர் காவல் மரங்களும் நின்னால் வெட்டப்பட்டு அழிந்தன. வீட்டில் சமையல் செய்வார் மூட்டிய தீ அவியுமாறு, ஊருக்கே எரியூட்டினாய் நீ. இவ்வளவும் தம் நாட்டிடை விளையக் கண்டும்,நின்னை வெல்லும் வகை யாது என அறியாது மயங்கினர், பகைவர். இப்படிப் பல இன்னும் செய்வையோ என அஞ்சித் தம் வீரமுங் குன்றியவராகி நாணமுற்றும் ஒதுங்கினர். பகைவரைக் கலக்கும் இத்தகைய போராற்றலும், சூழ்ச்சித்திறனும் உடையவனே தலையாலங்கானப் பெரும்போரிலே எதிர் நின்ற பகைவரனைவரையும் கொன்று. குவித்துக் காலனாக விளங்கிய வலிமையுடையவனே! நின்னைக் காண எண்ணினேன்; வழியும் கொண்டேன். வழியில் கோடற்ற கலைமானைப் புலி பற்றக்கண்டு வெருவித் தன் மறியை அணைத்துக் கொண்டே துள்ளியோடிற்று அம்மானின் பிணை; அதற்கு இரங்கினேன்.ஆயின் நாளும் நடைபெறும் கொடுநிகழ்ச்சி அதுவே யாதலாற் போலும், அப் பிணை அருகிருந்த வேளைப் பூவினைத் தன் மறியினை வாழ்விக்கும் பாலினைப் பெறுவான் வேண்டித் தின்று கொண்டிருந்தது! நின் படையெடுப்பால் தம் கணவரை இழந்த நின் பகைநாட்டுப் பெண்டிர், தம் மக்கள் வாழ்வு . குறித்துத் தாமும் உயிர் ஒம்பியிருப்பர் என்ற உண்மையுணர்த்தும், கடத்தற்கரிய அக் கொடுங்காடும் கடந்து வந்து, நின்னைக் கண்டேன். என் துயரும் இனி இல்லையாகும்! நீ வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருள்: 1. வெளிறு - வெண்மை. பணை - கூடம். 5. சூர் நவை - சூரபன்மாவைக் கொன்ற கூளியர் - மறவர். 6. மிச்சில் ஒழி பொருள். 7. வீசிய புலனும் - சிதறிய நிலங்களையும், 9. கடி மரம் காவல் மரம் 10, நைப்ப - கெடுக்க இணைப்ப' என்றும் பாடம் உண்டு; கெடுப்ப என்பதே பொருள். 11. நண்ணார் - பகைவர். 12. துன்னல் போகிய அணுக வொண்ணாத,18. எழிற் கலை-பெரிய கலை 10. பறந்தலை பாழிடத்து. 22 அத்தம் - அருஞ் சுரம்.