பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

37


நின்னொடு; தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு நின்று மூத்த யாக்கை யன்ன, நின் - ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த, - இரவன் மாக்கள் ஈகை நுவல, - 3O ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப, தொல்லிசை, மலர்தலை உலகத்துத் தோன்றிப் 35

பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.

பொருளைத் தனக்கெனக் காவாது வழங்கி மகிழ்பவன் பெருவேள் எவ்வி. அவனது மிழலைக் கூற்றம் நீர் வழங்கும் வாய்த்தலைகளை உடையது. ஞாயிற்றின் வெம்மையை நெல்லரியும் உழவர் வெறுப்பர். கடல் அலைமேல் பாயும் திண்மையான படகினையுடைய நுளையரோ வெம்மையான மதுவை விரும்பி உண்பர். புன்னைப் புதுமலர் மாலை சூடிக், கானலிடத்தே, அவர் வளையணிந்த மகளிர்க்கு முதற்கை கொடுத்துக் குரவைக் கூத்தும் ஆடுவர். முள்ளிப்பூ மாலை சூடிய பரதவர் மகளிர், பனைநுங்கின் நீரும் கருப்பஞ்சாறும் இளநீருடன் கலந்து உண்டு, பின் கடல் நீரிலே பாய்ந்து ஆடியும் மகிழ்வர். இத்தகைய வளமுடன், பல்வகை மக்களும் வாழும் கடற்கரை நாடு எவ்வியின் மிழலைக்கூற்றம். அதனை யடுத்தது, வயலிடத்துக் கயல்மீன்களை உண்ட நாரை நெற்போரிடத்தே உறங்கும் பொன்னணிந்த யானைகளையுடைய நெல்வளமிக்க முத்துற்றுக் கூற்றம். இவ்விரண்டையும் வெற்றி கொண்டவன் நீ உயர்ந்த குடையும், கொடி பறக்கும் தேரும் உடைய செழியனே! நின் வாழ்நாள் நிலைப்பதாக! நின் பகைவர் வாழ்நாள் இற்றுப் போவதாக! நின் வெற்றிக்குடியும், வாள்மறவரும் நின் முயற்சி வன்மையை வாழ்த்துவாராக இரக்கும் பரிசிலர் நின் புகழைப் பாடுவாராக வளையணிந்த மகளிர் நறுமணமிக்க மதுவை மடுப்ப, அதனையுண்டு மகிழ்வுடன்.இனிதே வாழ்வாயாக! பெருமானே! "வீர ஒழுக்கம் வல்லவரே வாழ்ந்தோராவார்’ என்பர் அறிவுடையோர். பழமையான புகழும் அதுவே! பரந்த இவ்வுலகிற் பிறந்தும் அவ்வாறே வீரமுடன் ஒழுகாது இருந்தோர் பலர். அவர் எல்லாம் வாழ்ந்தவரன்று; தாழ்ந்தவரே யாவர்! - -

சொற்பொருள்: இருந்தொழுவர் - பெரிய உழவர். 15. விரா

அய் - கலந்து. 20. சேக்கும். உறங்கும்.