பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

புறநானூறு - மூலமும் உரையும்


'சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,

கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும், மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் பேதைமை அல்லது ஊதியம் இல் என முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும் 5

அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது; வட்டவரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் கானத் தோர், நின் தெவ்வர்; நீயே, 10

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே, - அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் 15 ஆற்றும், பெரும! நின் செல்வம், ஆற்றாமை நின் போற்றா மையே!

மக்கட் பிறவியிற் குறைபாடு உடையவை என்பன குருடு, வடிவற்ற தசைத்திரள், கூன், குறள், ஊமை, செவிடு. மா, மருள் ஆகிய எண்வகையாம். இவற்றால் பயன் யாதுமில்லை என்பர் அறிந்தோர். இக் குறை யாதுமின்றி நல்லுடல் பெற்றவன் நீ. ஆதலின், அதன் திறத்தை யான் உரைக்க வரவில்லை. வட்டவரிச் செம்பொறிக் காட்டுக்கோழிச் சேவல் புனங்காப்போரைத் துயிலெழுப்பும் காட்டகத்தே, நின் பகைவர் நினக்கு அஞ்சிச் சென்று ஒளிந்துவிட்டனர்.வேலிப்புறத்துநின்று வேண்டியவர்க்கு, உள்ளேயிருப்போர்பிடுங்கி எறியும் கரும்பு தாமரைப் பூந்தாதினை உதிர்க்கும்; அதனால், பொய்கையில் எழுந்தடங்கும் அலைகளால் கூத்தர் ஆடுகளம் போல் அப் பொய்கையும் தோன்றும். அத்தகைய வளநாட்டினன் நீ! எனவே, வளம்பெறவும் நின்னை யாம் வாழ்த்த வேண்டுவதில்லை. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றும் செய்பவன் நீ! பெருமானே! நின்னைப் போற்றாதவரே நின் செல்வத்தைப் பெறாதவராவர்!

சொற்பொருள்: 1. சிதடு - குருடு, உறுப்பில் பிண்டம் - வடிவு இல்லாத தசைத் திரள், மணைபோலப் பிறக்கும் அது. மா என்பது, விலங்கு வடிவமாகப் பிறக்கும் அது. மருள்என்பது, அறிவு இன்றியே மயங்கியிருக்கும் அது. ஊதியம் என்பது, அறம் பொருள் இன்பங்களை அறம் ஒன்று மட்டுமே என்பாரும் உளர்.