பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

புறநானூறு - மூலமும் உரையும்



சொற்பொருள்: 1. நளியிரு நீர் செறிந்த ஏணியாக

எல்லையாக 6. அலங்குகதிர் கனலி - விளங்கிய சுடரையுடைய ஞாயிறு (சூரியன்), 17 கொண்மூ முகில், 22 வீற்று வேறு. 23. கண்ணகன் இடமகன்ற, 32. பாரம் - குடி ஒம்பி பாதுகாத்து. அத்தையும், ஆங்கவும், மதியும் அசை நிலைகள், 34 நின் அடிபுறம் தருகுபவர் நின்னடியைப் போற்றுவர்.

36. நீயே அறிந்து செய்க!

பாடியவர்: ஆலத்துர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.

(மேற்சென்றானைச் சந்துசெய்து மீட்டலின், இது துணை வஞ்சி ஆயிற்று. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்' என்னும் துறைக்கு இளம்பூரணரும் (புறத். சூ. 10), இது, 'புறத்து உழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத்து உரைத்தது' என்பதற்கு எடுத்துக்காட்டாக (புறத்சூ,12) நச்சினார்க்கினியரும் காட்டுவர்.)

அடுநை யாயினும், விடுநை யாயினும், நீ அளந் தறிதி நின் புரைமை; வார்கோல், செறியரிச் சிலம்பின்,குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும். தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் 5

கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை, தன்ஊர் - நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப, . 10

ஆங்குஇனி திருந்த வேந்தனோடு, ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே. - சிலம்பும் வளையும் அணிந்த இளமகளிர், பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடும் ஆன்பொருநையின் வெண்மணல் சிதறும்படியாக, நின் வீரர், கூரிய கோடரி கொண்டு காவற்காடுகளின் மரங்களை வெட்டுகின்றனர். அதனால், பூநாறும் அம் மரங்களின் நெடிய கொம்புகள் நிலைகலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும் ஒலி, நகருள் காவல் மிகுந்த நெடுமதில் சூழ்ந்த அரண்மனையிலே