பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുക്ഷേ - 55

இருக்கும் சேரனின் காதுகளிலும் சென்று ஒலித்திருக்குமன்றோ! அது கேட்டும் போருக்கு எழுந்து வராமல், அங்கேயே அவன் இனிதாக இருக்கின்றானே! வீரமற்ற அத்தகையவனுடன், முரசம் கறங்க நீ போரிட்டனை என்பது, வெட்கந்தரும் செயலாகும், போரிடுவாயோ, அன்றி விடுவாயோ? அதை நீயே எண்ணி ஆராய்ந்து முடிவு செய்வாயாக!

சொற்பொருள்: 1. அடுநை - கொல்வாய், விடுநை - கொல்லாதொழிவாய் 2. புரைமை - உயர்ச்சி. 4. தெற்றி ஆடும் திண்ணை போல உயர்ந்த எக்கர்க்கண்ணே இருந்து கழற்சி விளையாடும்; எக்கர் - மணல்மேடு. 6. கருங்கை - வலிய கையை உடைய அரம்செய் - அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட, 8. வீ - பூ புலம்ப தனிப்ப. 10. கடிமனை - காவலையுடைய கோயிற்கண்ணே. 1. இனிது இருந்த இனிதாக மானம் இன்றியிருந்த, 12 சிலைத்தார் - இந்திரவில்போலும் மாலையையுடைய. -

37. புறவும் போரும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வாகை, உழிஞை எனவும் பாடம். துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.

(புறவுக்கு உற்ற துயரைத் தீர்க்கும் பொருட்டுத் துலைபுக்க அருளாளனின் மரபினனாகியும், செருவினிடத்து இவற்றை நல்லனவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாய்’ என, அவன் மறமாண்பை வியந்து கூறினர். அரசனது இயல்பின் மிகுதியைக் கூறுதலால், இச் செய்யுள் அரச வாகை ஆயிற்று. பழைய வரலாற்றையுடைய முன்னோனது நிலையைக் கூறுதலால் முதல் வஞ்சியும் ஆகும். 'முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம்’ என்னும் துறைக்கு எடுத்துக் காட்டுவர்.இளம்பூரணர் (புறத். சூ.10)

நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த, வேக வெந்திறல், நாகம் புக்கென, - விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத்து உரும்எறிந்தாங்குப், புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல் 5

சினங்கெழு தானைச் செம்பியன் மருக! கராஅம் கலித்த குண்டுகண் அகழி, இடம்கருங் குட்டத்து உடன்தொக்கு ஓடி, யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்