பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

புறநானூறு - மூலமும் உரையும்



பெருமானே! ஒரு பிடியானை கிடக்கும் அளவு சிறிய இடமாயினும், அதன்கண் வளம்பெருக்கி, ஏழு களிற்று யானை களைப் பாதுகாக்க வல்ல உணவுப் பொருள்களை உளவாக்கும் சோழவளநாட்டை உரிமையாக உடையவனே காவல் மிகுந்த நின் பகைவரது அரண்களை எதிர்நின்று அழித்தனை. அவரையுங் கொன்று அவர் மகுடத்துப் பசும் பொன்னால் வீரக்கழல் செய்தும் அணிந்துள்ளனை. அத்துணை வலிமையும் ஆண்மையும் உடையவனே! வயவேந்தனே! நின்னை இழித்து உரைப்பவர் கழுத்திறைஞ்சித் தாழவும், நின்னைப் புகழ்ந்து உரைப்பவர்பால் இன்பப் பொலிவு தோன்றவும் இன்று கண்டோம். இனியும், இவ்வாறே காண்போம். எந் நாளும் இன்மொழி பேசுபவனாகவும், காண்போர்க்கு எளிய செவ்வி உடையவனாகவும், நீ விளங்குவாயாக! -

சொற்பொருள்: 2. கடந்து அட்டு - எதிர்நின்று அழித்து. 4. கழல்தைஇய வீரக்கழல் செய்து புனைந்த 6. எருத்து அடங்க கழுத்து இறைஞ்ச.9 எண் பதத்தை - எளிய செவ்வியை, 8 ஆகுமதி

- ஆகுக. மதி : முன்னிலை அசைச்சொல்.

41. காலனுக்கு மேலோன்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன். சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

("காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவிற் செருமிகு வளவ' என மன்னவன் புகழும், நிற் சினை.இயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங் கலக்குற்றன்று’ என, ஒன்னார் நாடு அழிபிரங்கியதும் கூறுதலால், இது கொற்றவள்ளை ஆயிற்று நிமித்தம் பற்றி வந்ததற்கு இளம்பூரணரும் (தொல். புறத் சூ. 30), பாடாண் கொற்ற வள்ளைக்கும் (சூ. 34), ஒம்படை வாழ்த்திற்கும் (கு 36) நச்சினார்க்கினியரும் இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.

காலனும் காலம் பார்க்கும்; பாராது வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடுஉம் வெல்போர் வேந்தே! திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும், பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், 5

வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும், எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், வெள்ளி நோன்படை கட்டிலொது கவிழவும், 10