பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ു 61

கனவின் அரியன காணா, நனவின் செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி, மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர், புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு, எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு

பெருங்கலக் குற்றன்றால் தானே, காற்றோடு எரிநிகழ்ந் தன்ன செலவின் செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.

கூற்றுவனும் ஒருயிரைக் கொள்ள, அதற்கான ஆயுளின் முடிவுகாலம் வரும்வரை காத்திருப்பான். அவ்வாறு பகைவரின் அழிவுக்கான காலம் எதுவெனவும் பாராது, வேல் நெருக்கங் கொண்ட பெரும்படையுடைய மேலான மன்னரும் தொலையு மாறு, விரும்பினால் விரும்பியவுடனேயே கொன்று அழிக்கும் வெற்றிப் பேராற்றல் உடைய வேந்தனே! எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து வீழவும், பெருமரங்கள் இலையற்றுக் கிளைகள் வற்றி உலரவும், அச்சந்தரும் பறவைகளின் குரல்கள் ஒலிக்கவும், பற்கள் தரையிலே உதிரவும், தலைமயிர் மீது எவரோ எண்ணெய் வார்க்கவும்,பன்றி ஏற்றின்மேல் ஏறவும், ஆடையைக் களையவும், ஒளிவீசும் படைக்கலங்கள் தாமிருக்கும் கட்டிலிலே முறிந்து சரியவும் - இங்ங்னமாகக் கனவிலும் பொறுத்தற்கு அரியனவற்றையே கண்டு பகைவர் அஞ்சப்போர் செய்யும் ஆற்றல் உடையவனே! நீ மேன்மேலும் வெற்றியுடன் முன்னேறக்கண்ட பகை நாட்டினர் நிலையை என்னென்பேன்? காற்றுடன் சேர்ந்து நெருப்புப் பற்றியதுபோல நீ சென்றாய். பகைநாட்டுப் போர் மறவர் வீழ்ந்துபடக், காவலற்று மயங்கின அவர் இல்லங்கள். அந்நிலைக்கு வருந்தும் எஞ்சின ஆடவர், தம் வருத்தத்தைத் தம் மனைவியர் அறியக்காட்டாது, தம் சிறுமகாரின் பூவனைய கண்களை முத்தங்கொண்டு, தம் துயரை மறப்பர். இவ்வாறு துன்புறும் ஆடவரோடு அந்நாடுகள் கலக்கமுற்றவனே!

சொற்பொருள்: 4, உற்கம் - எரிகொள்ளி, உற்கவும் - எரிந்து வீழவும், விண்மீன் எரிந்து விழவும். 5. வற்றல் - பசையற்று உலர்ந்த கொம்பு. 6. கனலி - ஞாயிறு. துற்றவும் பலவிடத்தும் செறிந்து தோன்றவும். 7. பிள் - ஆந்தை முதலாயின. 9 களிறு ஆண்பன்றி. காழகம் - ஆடை 10. நோன்படை வலிய படைக்கலம், 1. காணா - கண்டு.12. முன்ப-வலிமையுடையோய். 13. மையல்- மயக்கம். ஏமம் - காவல். 14. முத்தி முத்தங் கொண்டு. எவ்வம் கரக்கும். தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும். .