பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

புறநானூறு - மூலமும் உரையும்



மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்

சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்

புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே

வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

நாடுகாவலை ஏற்றுக்கொண்டு, வானத்து மழையும் நாணும்படியாக, இரவலர்க்கு வரையாது வழங்குபவன் கடுமான் கோதை அவன் எம் இறைவன்! அவன் தலைநகரிலே, அந்நகரவரே போலக் கேட்பாரின்றி தலைநிமிர்ந்து செல்வது எம்போன்ற இரவலர்க்கு மட்டுமே மிகவும் எளிது. எம்போல அதனுள் புகுவதற்கு எளிது எனப் பகைவரும் நினைத்தால், அது அவரது அறியாமையே யாகும். இடையன் ஆட்டு மந்தையை ஒட்டிக் கொண்டு புலி படுத்திருக்கும் இடத்தை நோக்கிப் போயினாற் போல, வலிமிகுந்த அவன் ஊரினுட் புகமுயன்ற மாற்றார்தம் நிலையும் படையும் அழிந்து போக, அவர் முயற்சியும் அவர்க்கே கேடாக முடியும்!

சொற்பொருள்: 3 நாளவை - நாளோலக்கத்தின்கண். 7. கவிகை இடக் கவிந்த கை, 8. துப்பு எதிர்ந்து வலியொடு மாறுபட்டு, 9. நெடு மொழி - வஞ்சினம். 10. உவலைக் கண்ணி - தழைக் கண்ணி. 12. சிறுதலை ஆயம் - சிறிய தலையை யுடைய ஆட்டினம்.

55. மூன்று அறங்கள்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: செறியறிவுறுஉ

('அரசின் கொற்றம் அறநெறி முதற்று. அதனாற் கோல் கோடாது, குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையையாகி, இல்லோர் கையற, நீ எக்கர் மணலினும் பல காலம் வாழ்க’ என, அறநெறி அறிவுறுத்தி வாழ்த்தலின், செவியறிவுறுஉ ஆயிற்று) -

ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளிஇ, ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல, 5 வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!

கடுஞ் சினத்த கொல்களிறும்;

கதழ்பரிய கலிமாவும்,