பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

77


நெடுங்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகழ்மறவரும், என, 10

நான்குடன் மாண்டதாயினும், மாண்ட அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்; அதனால், நமரெனக் கோல்கோ டாது, 'பிறர் எனக் குணங் கொல்லாது, ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும், 15 திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீ நீடு வாழிய நெடுந்தகை, தாழ்நீர் வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில் 20

நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக், கடுவளி தொகுப்பஈண்டிய வடுஆழ் எக்கர் மணலினும் பலவே.

மூவெயில் எய்து அழித்த இறைவனின் நெற்றிக்கண்ணைப் போலப் பிற வேந்தரினும் மேம்பட்டு விளங்கும் மாறனே! கொல்களிறும், விரைந்து செல்லும் குதிரையும், கொடி பறக்கும் தேரும், அஞ்சாத போர் மறவரும் உடையாய்! அவை நினக்குப் பெருமை தருவனவே; என்றாலும், அறநெறியை முதலாக உடையதே அரசனது சிறப்பு. அதனால், 'நம்மவர் என அறம் கோணாது, அயலார்’ என அவர் நற்குணங்களை வெறுத்து அவரைக் கொல்லாது, ஞாயிறு ப்ோன்ற கொடையும், திங்கள் போன்ற அருளும், மழை போன்ற கொடையும் உடையவனாக நீ விளங்குக இல்லாதவர்க்கு இரங்கி அவர் துயரினைத் தீர்ப்பாயாக நெடுந்தகையே! திருச்செந்தூர்க் கடற்கரையிலே பெருங்காற்றுத் திரட்டிக்குவித்திருக்கும்மணலினும் காட்டில் நெடுநாள் புகழுடன் நீயும் வாழ்வாயாக! -

சொற்பொருள்: வேந்து மேம்பட்ட பிறவேந்தருள்ளும் மேம்பட்ட 7 கதழ் - விரைவு. கலி - மனம் செருக்கிய 14. சாயலும் - மென்மையும்.16. கையற இல்லையாக 18. புணரி அலை. செந்தில் - திருச்செந்தூர். 21. எக்கர் - மணல் மேடு,

56. கடவுளரும் காவலனும்! பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்). பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: பூவை நிலை.