பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-உழிஞைப்படலம் . 103 எழுதெழின் மாடத் திடனெலாம் நூறிக் கழுதையேர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற் கள்விரவு தாரான் கதம். . - 120 சித்திரம் எழுதிய அழகிய மாடத்திடம் எல்லாம் இடித்துக், கழுதையே ஏராகவும் கையிடத்தே ஒளிருகின்றவேலே ஏரடிக்குங் கோலாகவும் கொண்டு உழுவித்து, அதன்பின் வெள்வரகும் கொள்ளும் விதைத்திட்டாலும், தேன் கலந்த மாலையினை யுடைய உழிஞை மன்னனின் கோபம், அதன் பின்னரும் கெடாதுபோலும்! - - . உழிஞை வேந்தனின் ஆறாத கோபத்தைக் கண்ட படை மறவருள் ஒருவன் கூறியது இது.கள்-தேன்."வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்தனையவர் நனந்தலை நல்லெயில்’ என வரும் புறப்பாட்டு அடிகளும் இதனைக் காட்டும்; (புறம்.15:2- - 3). வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் என வரும் புறப்பாட்டும் இதனை வலியுறுத்தும் (புறம் 392, 9-10). . . 26. வாள்மண்ணு நிலை புண்ணிய நீரிற் புரையோர் ஏத்த மண்ணி வாளின் மறங்கிளந்தன்று. உயர்ந்தோர்கள் போற்றப் புண்ணியநீராலே மஞ்சன மாட்டிய கொற்றவாளினது மறப்பண்பினைச் சொல்லியது, வாள்மண்ணுநிலை ஆகும். மண்ணுதல் நீராட்டுதல். தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்தும் இடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான் புடையார் அறையப் புகழ். - 121 வெற்றிக் கொடி விளங்கும் தேரினனான உழிஞை வேந்தன், பின்னரும், இடி முழக்கினை ஒத்த வீரமுரசம் ஆர்ப்ப, இந்த மதிலிலுள்ளே, தீர்த்த நீரும் மலரும் பெய்து, திக்கெலாம் தன் புகழ் விளங்குமாறு, பக்கத்துள்ள மன்னரெல்லாம் தனது புகழினைப் பேசக், கூர்மையான தனது கொற்ற வாளினை நீராட்டிக், களவேள்வி வேட்டான்! - பேர்த்தும் வேட்டான்' என்பதனால், முன்னரும் வேட்டானாயிற்று. புடையார்-பக்கலிருந்த பிற வேந்தர்; இவர் உழிஞை வேந்தனுக்குப் படைத்துணை வந்தவர். தீர்த்த நீர்புண்ணிய நன்னீர், பணை துவைப்பஆர்ப்பொலி எழுப்ப.