பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 1. வெட்சிப்படலம் வெட்சி வெட்சியரவம் விரிச்சி செலவு வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள் பூசன் மாற்றே புகழ்சுரத் துய்த்தல் தலைத்தோற்றம்மே தந்துநிறை பாதீடு உண்டாட் டுயர்கொடை புலனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்துடிநிலையே கொற்றவை நிலையே வெறியாட்டுளப்பட எட்டிரண்டேனை நான்கொடு தொகைஇ - வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும். (1) வெட்சி, வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்று, சுரத்துய்த்தல், தலைத்தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை, கொற்றவைநிலை, வெறியாட்டு என இவை இருபதும் வெட்சித் திணையும். அதன் துறைகளும் ஆம். - வெட்சி என்பது திணையும், வெட்சியரவம் முதலாயின அதன் துறைகளும் என்று கொள்க. w - - வெட்சியின் விளக்கம் வெட்சி என்பது இருவகைத்து, மன்னுறு. தொழிலும் தன்னுறு தொழிலும் என - - வெட்சி என்பது மன்னுறுதொழிலும் தன்னுறு தொழிலும் என இரு வகையினை உடையது. . . . - வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றி கன்முறை ஆதந்தன்று. * - - பகைவரை வெற்றி பெறுதலைக் கருதிய வேந்தன் ஏவிய பொழுதிலாயினும், அவனது ஏவுதல் இல்லாதே யாயினும் சென்று, மாறுபாட்டினையுடைய பகை நாட்டிடத்தேயுள்ள பசு நிரைகளைக் கைக்கொண்டு வருவது, வெட்சி ஆகும். - 'பணிப்பவும் என்பது, அவன் வெளிப்படையாக ஆணையிட்ட காலத்து எனவும், பணிப்பின்றியும்’ என்பது, அவனது ஆணை பிறக்கா முன்பே எனவும் கொள்ளப்படல் வேண்டும். - -