பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்வெட்சிப்படலம் 9 பொருந்தாதார்; பகைவர். கட்சி-காடு. காரி-காரிப் பறவை; இந்நாளிற் சாக்குருவி என்பர். நிரைகோடற்குரிய மறவர்கள் நெடுவேலுடையராய், செருப்பினை அடிப்படுத்து, வெட்சிப்பூச் சூடித் துடிபடுத்து, நெடிபடு கானத்து ஆரதர் செல்வான் வந்து, பாடிப்புறத்தே ஒன்று கூடுகின்றதைக் குறிப்பது இத்துறையாகும். இங்ங்னம் அவர் திரளுங்கால் எழுகின்ற ஆரவாரத்தைக் கருதி இது வெட்சி யரவம் எனப்பெற்றது. இதனைப் படையியங்கு அரவம் எனத் தொல்காப்பியம் தெளிவுறக் கூறுதலை அறிககாரிகரும்பிள்ளை எனவும் கூறப்படும். 2. விரிச்சி வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு ஈண்டு இருண் மாலைச் சொல்ஓர்த்தன்று. நிரைகோடற்கு விரும்பிய மறவர்கள், தாம் விரும்பிய பொருளினது விளைவாக வந்துறும் நன்மையினை அறிந்து கொள்ளலின் பொருட்டாக, செறிகின்ற இருளினைக் கொண்ட மாலைப்பொழுதிலே, நற்சொல்லைக் கேட்டறிவது விரிச்சியாகும்; (விரிச்சி-சொல்), ஒன்றைச் செய்யத் தொடங்கும் முன்னர், அதை மனத்துட் கொண்டவர், ஏதிலார் வாய்ச் சொற்களாக எழுகின்றவற்றைக் கேட்டு, அச் செயல் இனிது முடியுமென உணர்தல் இது. எழுவணி சீறுர் இருண்மாலை முன்றிற் - குழுவினம் கைகூப்பி நிற்பத் - தொழுவிற் குடக்கண்ஆக் கொண்டுவா’ என்றாள் குனிவில் தடக்கையாய் வென்றி தரும். 4 கணைய மரங்கள் சூழ்ந்திருக்கும் சிற்றுாரிடத்தே, இருள் கொண்டமாலைப்பொழுதிலே, முற்றத்திடத்தே திரண்டிருந்த நம் மறவர்கூட்டம் கைகூப்பி நற்சொல்லை வேண்டித் தொழுது நிற்க, அவ்வேளையில்,"தொழுவின் மேற்குப்புறத்தே நிற்கும் ஆவினைக் கொண்டு வருக என்றாள் ஒருத்தி.ஆதலால், வளைந்த வில்லினை ஏந்தியிருக்கும் பெரிய கையினை உடைய தலைவனே! நமக்கே இம் முயற்சி வெற்றியைத் தருவதாம். - இது, படைமறவருட்சிலர் தலைவனிடம் உரைத்ததாம். எழுகணையமரம். ஊரைச் சுற்றினும் கட்டு வேலியாகக் கணையமரங்கள் நிறுத்தப் பெற்றிருத்தலைக் குறிக்க எழுவணி சீறுர்’ என்றனர். முன்றில்-முற்றம்; கோயின் முற்றம் எனவும் கொள்வர். 'குடக்கணி கொண்டுவா என்றாள்' எனப் பாடங்கொண்டு கட்சாடி இருக்கும் ஏணியிற் குடத்துக்கள்ளை