பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hయuత&తీEతL_QLతీLLు_ 11 கொள்ளுதற்கான வாய்ப்பினை அறிவதன் பொருட்டாகும். இதனால்,அவர் வெட்சிமறவர் வந்ததனை அறியாதவராக இருந்த நிலையினர் என்பது தெளிவாகும், நிலையும் நிரையும் நிரைப்புறத்துநின்ற சிலையும் செருமுனையுள் வைகி-இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் நமர். 6 பச்சிலையுடைய விரவித்தொடுத்த தேன்பொழியும் மாலையினையும், வீரக் கழலினையும் உடையவனே போரினை விரும்புகின்ற மறத்தினைக் கொண்டவனாகப் போர்முனையுள் வந்திருக்கும் தலைவனே! நம்மவராகிய ஒற்றர்கள், பகைவரது ஆனிரை நிற்கின்ற இடத்தையும், அவற்றின் அளவையும், அந்: நிரைகளின் புறத்தே அவற்றின் காவலாக நிற்கின்ற வில்வீரர்களின் அளவினையும், செறிந்த இருளிடத்தே சென்று ஒற்றி அறிந்தவராகத் திரும்பி வந்துள்ளனர். - - - இஃது, ஒற்றர் மீண்டு வருவதனை அறிந்த வெட்சி மறவருள் ஒருவன், தன் தலைவனிடத்தே சென்று அச் செய்தியினை அறிவித்தல், நிரைகோடற்குச் செல்லுமுன் அவை நிற்கும் இடத்தையும், அவற்றின் அளவையும், அவற்றைக் காத்து நிற்போரது வலிமையையும் அறிதலின் முறைமை இதனால் விளங்கும். இங்ங்னம் அறிந்தபின் மேற்செல்லுதலே வெற்றியின் உறுதிக்குத் துணைசெய்வதாகும். நள்ளிருட்கண் வந்தார்’ என்பது, இப்படி ஒற்றியறிதல் இருளினூடே செய்தற்குரியது என்பதனைக் காட்டும். - - - 5. புறத்திறை நோக்கரும் குறும்பின் நூழையும் வாயிலும் போக்கற வளைஇப் புறத்திறுத்தன்று. ஏனையோர் புறத்திறை என்பது, சென்று காணுதற்கும் அரிதான இயல்பினையுடைய காவற்காட்டினது சிறுவழியும் ப்ெருவாயிலும், உள்ளிருப்போர் புறம்போதலில்லாதபடிக்குச் சுற்றிவளைத்தவராக, வெட்சி மறவர், அதனைப் புறஞ்சூழ்ந்து முற்றியிருப்பது ஆகும். - - நூழை சிறுவழி வாயில் பெருவழி போக்கு அறவளைஇ' என்றது அவரைப் புறம்போக விடின், அவர் தம் மன்னர்க்குச் செய்தியறிவித்துத் தம் காவலைப் பலப்படுத்திக் கொள்வா ராதலின், அங்ங்னம்போகவிடாது தடுத்து வளைத்துக் கொண்டு என்பதாம். குறும்பு-காவற்காடு, சிற்றரனும் ஆம்