பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 13. கொண்டகம் புகுதல் காதல் கெருகக் கணவனைக் கண்ணுற்றுக் கோதையாற் பிணித்துக் கொண்டகம் புக்கன்று. தன்பாற் காதலானது பெருகக், கணவனை நோக்கித் தன்மாலையினாலே அவனைப் பிணித்தவளாகத் தலைவி தன் இல்லுள் அவனுடனே புகுந்தது, கொண்டகம் புகுதல் ஆகும். கண்டுகளித்துக் கயலுண்கண் நீர்மல்கக் கொண்டகம் புக்காள் கொடியன்னாள் - வண்டினம் காலையாழ் செய்யும் கருவரை நாடனை மாலையான்மார்பம் பிணித்து. - 3.18 பூங்கொடியினைப் போன்றாளான தலைவியானவள், வண்டினம் காலைப்போதிலே யாழொலிபோல முரன்று கொண்டிருக்கும் வளத்தினையுடைய கரிய மலைநாடனாகிய தலைவனைக்கண்டுகளித்தாளாகிக், கயல்போன்றமையுண்டதன் கண்களிடத்தே நீர் பெருக, அவனை, மாலையாற் பிணித்துப் பற்றிக்கொண்டு, தன் இல்லத்துள்ளும் புகுந்தனள், - - 14. கூட்டத்துக் குழைதல் பெய்தார் அகலம் பிரிதல் ஆற்றாக் கொய்குழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று. கொய்து கொண்ட தழையால் ஆகிய, ஆடையானது விளங்கும் அல்குலை உடையாளான தலைவி, இட்ட மாலையையுடைய தலைவனது மார்பினைப் பிரிதலைப் பொறாதவளாகக் கூட்டத்திடத்தேதான் குழைந்தது, கூட்டத்துக் குழைதல் ஆகும். - - மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பில் தயங்கு புனலூரன் தண்தார்-முயங்கியும் பேதை புலம்பப்பிரிதியோ நீயென்னும் கோதைசூழ் கொம்பிற் குழைந்து. - 319 பேதைமை உடையவளான தலைவி, தன் காமவேட்கையது மிகுதியினாலே மயக்கமுற்று, மகிழ்ச்சி பெருகப் பெரிய வரையினைப் போன்ற மார்பினையுடையவனும், அசையும் புனலினை உடையவனுமான தலைவனின் குளிர்ந்த மாலையினைத் தழுவியும், நான் தனித்திருந்து வருந்த நீ பிரிகின்றாயோ? என்று, மாலை சுற்றிய பூங்கொம்பைப் போலக் குழைந்தவளாகச் சொல்லுவாள். கூட்டத்திடையே அடுத்து வரும் பிரிவினை நினைந்து தலைவனிடம் கேட்டவாறு தலைவி தளர்வது இதுவாம்.