பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

," , புலியூர்க்கேசிகன்-பெருந்திணைப்படலம் 249 15. ஊடலுள் நெகிழ்தல் நள்ளிருள் மாலை நடுங்களுர் நலிய ஒள்வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று. ஒள்ளிய தொடிசெறிந்ததோளினை உடையவள் வாடியிருந்த காலத்திலே, செறிந்த இருளையுடைய மாலைக் காலத்தே வந்தடையா நின்ற நடுக்கந்தரும் துயரம் தன்னை வருத்தவும், தான் பெரிதும் நெகிழ்ச்சிகொண்டது ஊடலுள் நெகிழ்தல் ஆகும். தெரிவின்றி ஊடத் தெரிந்துநங் கேள்வர் பிரிவின்றி நல்கினும் பேணாய்-திரிவின்றித் துஞ்சேம் எனமொழிதி தூங்கிருள் மான்மாலை நெஞ்சேயுடையை நிறை. 320 நெஞ்சமே! ஆராயாதே நாம் ஊடுதலானே, அதனைத் தெரிந்தாரான நம் கணவர், நம்மை விட்டுப் பிரிதலின்றி அருகிருந்து தலையளி புரிவர்; புரிந்தாலும், நீ, அதனைப் பேணுகின்றிலை; நின் நிலையில் மாறுபடலின்றி, உறங்கேம் எனவும் சொல்லுதி, தங்கும் இருளினையுடைய மயக்கந்தரும் மாலைக் காலத்தே, நீநிறையினையும் உடையையாய் இருந்தனை. . ஊடலுள், தலைவி, ஆசை மிகுதியால் தளர்தலை இது உணர்த்திற்று. மாலையிலே, இரவில் துஞ்சேம் என அஞ்சுவாய்' என்றனள். 16. உரைகேட்டு நயத்தல் துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி உயர்வரை நாடன் உரைகேட்டு நயந்தன்று. துயரத்தொடுந் தங்கியிருந்தவளான சூழ்ந்த வளையினைக் கொண்ட தோளினையுடையவள், உயர்ந்த மலைநாட்டவனான தலைவனது உரையைக் கேட்டு நயந்தது, உரைகேட்டு நயத்தல் ஆகும். - ஆழ விடுமோ அலரொடு வைகினும் - தாழ்குரல் ஏனல் தலைக்கொண்ட - நூழில் விரையாற் கமழும் விறல்மலை நாடன். உரையால் தளிர்க்கும் உயிர். - 321 வளைந்த கதிரையுடைய தினையிலே படர்ந்த நூழிற் கொடியினது மணமானது கமழாநின்ற, வெற்றி பொருந்திய மலைநாடனான தலைவனது உரையொன்றாலேயே தளிர்க்கும் இயல்புடைய என் உயிரானது, பிறர் கூறுகின்ற அலரொடு தங்கியிருந்தாலும், என்னைத் துயரத்துள் ஆழும்படியாக விட்டுவிடுமோ? 'விடாது' என்பது குறிப்பு.