பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 17. பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் - கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு பாடகச் சீறடிபணிந்தபின் இரங்கின்று. கோடுகள் உயர்ந்த மலைநாட்டினை உடையவன், குவிந்த கையுடனே பாடகம் விளங்கும் தனது சிறிய பாதங்களிற் பணிந்தபின் பின்னர்த், தலைவி அவனுக்கு இரங்கியது, பாடகச்சீறடிபணிந்தபின் இரங்கல் ஆகும். அணிவரும் பூஞ்சிலம் பார்க்கும் அடிமேல் மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும் வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை நிற்கென்றி வாழியர் நீ! - 322 அழகிய வரையனைய மார்பினையுடையான் கலங்கி, அழகுவருகின்ற பொலிவுடைய சிலம்பு முழங்கும் நம் அடி மேல் வீழ்ந்து பணியவும், வன்மையுடையாய் இருந்த என் நெஞ்சமே! நீ, வணங்குதற்கு ஆற்றாயாய்ச் சிறுபொழுது மேலும் ஊடிநிற்க என்கின்றனை நீ வாழ்க! 18. பள்ளிமிசைத் தொடர்தல் மாயிருங் கங்குல் மாமலை நாடனைப் பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று. மிகப்பெரிய இரவுப்பொழுதினிடத்தே தலைவி, உறக்கத்தை ஒழித்தாளாகப், பெரிய மலைநாட்டை உடையவனை, அவனது படுக்கை மேலாகப் பற்றிக்கொண்டது, பள்ளிமிசைத்தொடர்தல் ஆகும். யானை தொடரும் கொடிபோல யானுன்னைத் தானை தொடரவும் போதியோ - மானை மயக்கரிய உண்கண் மடந்தைதோள் உள்ளி - . இயக்கருஞ்சோலை இரா. 323 தலைவனே! யானையைப் போகவிடாது பற்றியிழுக்கின்ற கொடியினைப்போல யான் நின்னை ஆடைபற்றி இழுக்கவும், எவரும் இயங்குதலற்ற இரவுப் போதிலே, நீயும், மானையும் மயக்குதற்குத் தக்க வரிகளையுடைய மையுண்ட கண்களையுடைய பரத்தையது தோள் நலத்தினை நினைந்தாயாகப் போகின்றாயோ! அரிய-வரிகளையுடைய. 19. செல்கென விடுத்தல் பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கிச் சேயிழை யரிவை செல்கென விடுத்தன்று.