பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் k வெட்சிப் படலம் 13 இகலே துணையா எரிதவழச் சீறிப் புகலே அரிதென்னார் புக்குப்-பகலே தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு. 8 கொலைத் தொழிலாற் சிறப்புற்ற வில்லினைக் கைக்கொண்டோரான வெட்சி மறவர்கள், பகையுணர்வு ஒன்றே தமக்குத் துணையாகக் கொண்டவராக, நெருப்பு எழும்படியாகச் சீற்றங்கொண்டு, பகையரணுட் புகுதல் அரிதானதென்றும் கருதாதவராகச் சென்று, பகற்பொழுதிலே எவருக்கும் தோற்காத மறத்தினையுடைய பகைவரது வீரர்கள் செத்து வீழும்படியாக அவரைக் கொன்று, தம் கால்களிற் கட்டப்பெற்றுள்ள வீரக்கழல்கள் ஆர்ப்பொலிசெய்யச் சுழன்று போரிட்டு, அரணினையும் கைப்பற்றிக் கொண்டனர். இது கண்டவர் உரைப்பதாம். இகல்-மாறுபாடு; பகையுணர்வு. இகலே துணையாயது. அதுவே பகைவரை அழித்தற்குரிய ஊக்கத்தைத் தந்ததால், எரிதவழச் சீறி என்பது சினத்தின் மிகுதியைக் குறித்தது. அன்றிப் பகையரணிடத்து எரிதவழும்படியாகச் சீறி எனினும் ஆம், பகலே தொலைவிலார் வீழ’ என்றதனால், முற்றியது இரவிலென்பதும், பகைமறவர் அதனை அறியாதாராயிருந்தனர் என்பதும் கூறப்பட்டது. தொடுகழல் ஆர்த்தல் சுற்றிச் சுழன்று போரிடலால், கழல் வீரக்கழல்; இது, அவர் முன்னரும் போர்பல வென்ற வீரச்செறிவினர் என்பதனைக் குறித்தது. புகலே அரிது என்றார்’ என்பதனால், அவ்வரணின் வலிமையினையும் கூறினர்.அதனைக் கொண்டவராகவே வெட்சியாரின் வீரச் செறிவும் நன்கு புலப்படும். - 7. ஆகோள் வென்றார்த்து விறன் மறவர் கன்றோடும் ஆதழிஇயன்று. ஆகோளாவது, வெற்றியாளரான வெட்சிமறவர்கள் பகையரணை வென்று ஆரவாரித்தவராக, அவற்றுள்ளிருந்தவான கன்றுகளொடும் கூடிய பசுநிரைகளைத் தாம் கைப்பற்றிக் கொண்டது ஆகும். கொடுவரி கூடிக் குழுஉக்கொண்டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலும்-நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற - நிணநிரை வேலார் நிலை. - 9