பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பெரும்பணை மென்தோள் பிரிந்தாரெம் முள்ளி வரும்பருவம் அன்றுகொல் ஆங்கொல்-சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும் மாமயிலும் ஆலும் மலை? 330 வண்டினம் ஒலிக்கும் பூக்கள் மலிந்த கொன்றை மரங்கள் குறுங்கா டெல்லாம் பொன்னைப் போலப் பூக்கா நிற்கும்; மலையிடத்தே அழகிய மயில்களும் ஆடா நிற்கும்; பெரிய மூங்கிலைப் போலும் தோளினை உடையாளைப் பிரிந்து சென்றவர் எம்மை நினைந்து வருவதாகக் குறித்த கார்ப்பருவம் இதுவன்று கொல்லோ? அன்றி, இதுவாகும் கொல்லோ? கார் காலத்து அடையாளங்கள் தோன்றுதலால் ஆங்கொல் எனவும், தலைவன் வராமையினால் அன்றுகொல் எனவும் ஐயுற்றனள். 26. பருவ மயங்கல்-2 ஆங்கவர் கூறிய பருவம் அன்றெனத் தேங்கமழ் கோதை தெளிதலும் அதுவே. தேன் மணக்கும் மாலையினை உடையாள், அவ்விடத்துத் தலைவர் வருவதாகச் சொன்னகாலம் அஃது அன்றெனத் தெளிவு கொள்ளலும், பருவ மயங்கல் ஆகும். பொறிமயில் ஆலின பொங்கர் எழிலி சிறுதுவலை சிந்தின சிந்த-நறிய பவர்முல்லை தோன்றி பரியாமல் ஈன்ற அவர்வரும் காலமீ தன்று. 331 சோலையாகிய மேகம் சிறு தேன்துளியைச் சிந்தின; அங்ங்னம் சிந்தப் புள்ளிகளையுடைய மயில்கள் கூத்தாடின; இவ்வுண்மை அறியாதே, நறிய கொடியாற் சிறந்த முல்லையும் தோன்றியும் முகிழ்த்தன, இஃது அவர் வருகின்ற காலம் அன்று. -- wo காலம் அன்றெனத் தெளிந்தபடியால் பருவ மயங்கல் ஆயிற்று. - 27. ஆண்பாற் கிளவி காமுறு காமம் தலைபரிந் தேங்கி ஏமுற்றிருந்த இறைவன் உரைத்தன்று. தலைவியின்பால் காமுறுதற்குக் காரணமான காமம் எல்லை கடத்தலானே, ஏக்கமுற்று மயங்கியிருந்த தலைவன் உரைத்தது, ஆண்பாற் கிளவி ஆகும்.