பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பெருந்திணைப்படலம் 257 கயற்கூடு வாள்முத்தாட் கண்ணிய நெஞ்சம் முயற்கூடு முன்னதாகக் காணின் - உயற்கூடும் காணா மரபிற் கடும்பகலும் கங்குலும் நாணாளுமேயா நகை. 332 கண்ணாகிய இணைக் கயல்கள் பொருந்திய ஒளியுடைய முகத்தினளான தலைவியைக் கூடக் கருதிய என்னுடைய நெஞ்சமானது, முயலுக்கு உறைவிடமாகிய மதியத்தை முன்னதாகக் காணின் பிழைத்தல் கூடும்; ஒவ்வொரு நாளும் அவளைக் காணமாட்டாத முறைமையானே, கொடிய பகலினும் இரவினும் ஒருங்கே என்பால் மகிழ்ச்சியும் பொருந்தாதாயிற்றே! நகை என்றது, அவளைக் கூடுதலானே பிறக்கின்ற உள்ளக் களிப்பினை. 28. பெண்பாற் கிளவி வெள்வளை நெகிழவும் எம்முள்ளாத - கள்வனைக் காணாதிவ் வூரெனக் கிளந்தன்று. எம்முடைய வெள்ளிய வளைகள் கழலவும், எம்மை நினையாத கள்வனாகிய அவனை இவ்வூர் காணாது எனத் தலைவி சொல்லியது, பெண்பாற் கிளவியாகும். வானத் தியலும் மதியகத்து வைகலும் கானத் தியலும் முயல்காணும் - தானத்தின் ஒள்வளை ஓடவும் உள்ளான் மறைந்துறையும் கள்வனைக் காணாதிவ் ஆர். 333 இவ்வூரவர், நாள்தொறும் வானத்தே இயலும் நிறைமதியிடத்துக் காட்டிலே திரியும் முயலினைக் காண்பர்; ஆனால், என் கையிடத்தே நின்றும் ஒள்ளிய வளைகள் கழன்று போகவும் அதனை நினையானாகி மறைந்து வாழுகின்ற கள்வனைக் காணார்கள். 'இல்லாத ஒன்றையும் காண்பதாக உரைக்கின்ற ஊரவர், இருக்கும் அவனைக் காணாதது ஏன்? என, அவர் கூறும் ஊரது பேதைமையை உரைத்தளன். - 29. வெறியாட்டு தேங்கமழ் கோதை செம்மல் அளிநினைந்து ஆங்கந் நிலைமை யாயறி யாமை வேங்கையஞ் சிலம்பற்கு வெறியாடின்று. மணங் கமழுகின்ற மாலையினை உடையாள், தலைவனது தண்ணளியினை நினைவிள் கொண்டவளாக, அவ்விடத்து அந்நிலைமையைத் தாய் அறியாமற்படிக்கு, வேங்கை மரங்கள்