பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 .. புலியூர்க்கேசிகன் பெருந்திணைப்படலம் 259 பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வயல் ஊரன் நிலவுரைக்கும் பூணவர் சேரிச்-செலவுரைத்து வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல் - எங்கட் கவன்றார் எளிது. 336 பாண் மகளே! பல பொய்களையும் தலைவிக்குச் சொல்லி நடித்துப், பல வயல்களையுடைய ஊரனது நிலவைக் காட்டும் முத்தணிகளையுடைய பரத்தைய்ர் சேரியிடத்துப் போக்கைச் சொல்லி, வெவ்விய மதுவையுடைய மகிழ்ச்சியால் விழாவினைக் கொண்டாடாதே கொள்; எமக்கு, அவனுடைய மாலையைப் பெறுதல் மிகவும் எளிதாகும் என்பதனை அறிவாயாக தலைவனது பரத்தைமையைப் போக்குதற்கு விழாக் கொண்டாடும் விறலியிடம், பரத்தை கூறியது இது. 32. விறலிகேட்பத் தோழி கூறல் பேணிய பிறர்முயக் காரமு தவற்கெனப் பாணன் விறலிக்குப்பாங்கி மொழிந்தன்று. 3. பாணனுடைய பாணிச்சிக்குத் தலைவனுக்குத் தன்னை விரும்பிய பரத்தையரது தழுவுதல் அரிய அமுதத்தோடு ஒப்பதாகும் எனப் பாங்கி சொல்லியது, விறலி கேட்பத் தோழி கூறல் ஆகும். அரும்பிற்கும் உண்டோஅலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - கரும்போடு அதிரும் புனலூரற் காரமிர்தம் அன்றோ - முதிரும் முலையார் முயக்கு. 337 பெரிய தோளினையுடைய விறலியே! நீ பிணங்காதே; மலரினது மணம் அரும்பிடத்தும் உளதாமோ? வண்டுடனே ஆரவாரிக்கும் புனலையுடைய ஊரனுக்கு, முதிரும் முலையினையுடைய பரத்தையரின் தழுவுதல், பெறுதற்கரிய அமுதம் போன்றது அல்லவோ! முதிரும் முலையார் என்றது. இளமைப் பருவத்தாரான பரத்தையரை. இது, இளமை தீர் திறம். - 33. விறலி தோழிக்கு விளம்பல் ஆங்கன் முப்பவர்க் கருங்களி தருமெனப் பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று. - அவ்விடத்துத் தலைவனது மூப்புப் பரத்தையர்களுக்குப் பெறுதற்கரிதான களிப்பினைத் தருவதாகுமென்று, தோழி கேட்கும்படியாகப் பாணிச்சி சொல்லியது, விறலி தோழிக்கு விளம்பல் ஆகும். -