பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 3. மல்வென்றி (மற்போரிடும் மறவர்களது, அந்தச் செயலுள் விளங்கும் சிறந்த மேம்பாட்டைக் கூறுதல்) - கண்டான் மலைந்தான் கதிர்வானம் காட்டியே கொண்டான் பதாகை மறமல்லன்-வண்டார்க்கும் மாலை துயலும் அருவிய மாமலை - போலுந் திரள்தோள் புடைத்து. - 345 மறப்பண்பினை உடையவனான மல்லன், தன் எதிரே பொருத வந்தவனைக் கண்டான்; அருவிநீர் வீழ்கின்ற பெரிய மலையினை யொத்த வண்டினம் ஆர்க்கும் மாலை கிடந்து அசைகின்ற தன் திரண்ட தோள்களைப் புடைத்துக் கொண்டவனாக அவனுடன் போரிட்டான்; அந்த எதிரிக்குக் கதிரையுடைய வானத்தைக் காட்டியவனாகக், குறித்த தாயத்தையும் தான் கைக்கொண்டான். - - கதிர்வானம்காட்டல்-முதுகில் மண்படத் தரையிலேவிழ்த்தி வெற்றி கொள்ளல்; இன்றும் இதுவே மற்போர் மரபாக இருக்கிறது. பதாகை வெற்றிக் கொடியும் ஆம். - - - 4. உழவன் வென்றி - (உழவுத் தொழிலோனது உயர்தொழிலின் மிகுதியைச் சொல்லியது) - . . - மண்பதம் நோக்கி மலிவயலும் புல்செய்யும் கண்பட ஏர்பூட்டிக் காலத்தால்-எண்பதனும் தத்துநீர் ஆர்க்குங்கடல்வேலித் தாயர்போல் வித்தித் தருவான் விளைவு. 346 நிலத்தினது பதத்தினைப் பார்த்து, நீர்மலிந்த வயலிடத்தும், - நீர்வறந்த கொல்லியிடத்தும் பரக்க ஏரைப்பூட்டி உழுது, இயைந்த பருவத்தாலே விதைத்துத் தவழும் திரையொலிக்கும் கடலினை வேலியாகவுடைய பூமியிடத்துத் தாயரைப் போல எண்வகை உணவுப் பொருள்களையும் விளைத்துத் தருபவன், பல்லுயிர்களுக்கும் ஆக்கம் ஆவான். எண்பதன், நெல், வரகு, சாமை, தினை, இறுங்கு, கேழ்வரகு, கொள், உழுந்து என்பன. இறுங்கு.சோளம். 5. ஏறுகொள் வென்றி (கொல்லேறு தழுவி வெற்றியடையும் சிறப்பினைச் சொல்லியது)