பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uelgië Gsåså * கரந்தைப்படலம்- - – 27 வழியினையே பின்பற்றிப் போதற்கு உரியர். இதனை உரைப்பது, போற்றார் போகிய நெறியிடை ஏகின்று’ என்பது. இந்த வேறுபாட்டினை அறிதல் வேண்டும். புறத்திணை இயல், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம் போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டு நன்னிமித்தம் ஒர்தலாகிய விரிச்சியினைச் செலவுக்கு முன்னதாகக் கூறும். இங்கு, அது உரைக்கப்படவில்லை. எனினும், செல்பவர் அதனை அறிந்தே செல்வர் என்பது இயல்பு. அல்லது, வெட்சியாரை விரையப் பின்பற்றிச் சென்று போர் மலைதற்கு உரியவர் கரந்தையா ராதலின் விரிச்சியோர்தலை இவர் கருதுவதிலர் என்பதனால், இங்ங்னம் அதனை விடுத்துச் செலவினையே உரைப்பாராயினர் எனவும் கருதலாம். - . . . சங்கும் கருங்கோடும் தாழ்பீலிப் பல்லியமும் எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப-வெங்கல் அழற்சுரம் தாம்படர்ந்தார் ஆன்சுவட்டின் மேலே - நிழற்கதிர்வேல் மின்ன நிரைத்து. 24. எவ்விடத்தும், சங்கங்களும், கரிய கொம்புகளும், தொங்கும் மயிற்பீலிகளையுடைய பலவகை வாச்சியங்களும், பறையோசை யுடனே கூடியவையாக எழுந்து ஆரவாரிக்க, வெவ்விய கற்களையுடைய அழல்பரக்கும் காட்டினூடே, நிரைபோன காற்சுவட்டின் மேலாக நிழல்விடுகின்ற சுடர்வேல் . . ஒளிரும்படியாக ஒழுங்குபடுத்தியவாறு, கரந்தை மறவர்கள், தாமும் சென்றனர். - - பிலிமயிற்பீலி. இயம்-வாச்சியம். வெங்கல் அழற் சுரம்வெவ்விய கற்கள் அழலினைக் கக்கிக்கொண்டிருக்கின்ற கடுஞ்சுரமும் ஆம் நிரைத்து' என்பது வீரர் வரிசையாகச் சென்ற ஒழுங்கினைக் குறிப்பதாம். படைமறவர் அந்நாளினும் போர்ப்பறை முதலாய முழக்குடனேயே போர்மேற் செல்வர் என்பது இதனாற் புலனாகும். கோடு கொம்பு. 3. போர் மலைதல் வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி உளர்செருப்புரிந்தன்று. வெட்சி மறவராகிய ஆநிரையினைக் கைக்கொண்டு செல்லுகின்றவர்களைக் கண்ணுற்று, அவரை வளைத்துக் - கொண்டவராக, அவர்கட்கு அச்சம் ஏற்படுமாறு தாக்குதலை நிகழ்த்திக், கரந்தை மறவர்கள், அவருடன் எடுப்பும் சாய்ப்புமான போரிடுதலைக் குறிப்பது. இந்தப் போர்மலைதல் என்னும் துறையாகும்.