பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்_கரந்தைப்படலம் 33 கூறித் துன்புற்று வருந்தினர் பாணர் என்க. நாப்புலவர்-செந்தாப் புலவர்பூ-பொற்றாமரைப்பூ அரசர்கள் பரிசிலாக அளிப்பது இப் பூ இதனை உடையார் ஆதலால், பூப் புனையும் நற்குலத்துள் தோன்றிய' என்றனர். 10. நெடுமொழி கூறல் மன்மேல் பட்ட மதிக்குடை யோற்குத் தன்மேம்பாடு தானெடுத்துரைத்தன்று. மன்னருள் மேம்பாடு உடையவனும், நிலவனைய வெண் கொற்றக் குடையினை உடையவனுமாகிய தன்னுடைய அரசனுக்குக், கரந்தை மறவன், தன்னுடைய மேம்பாட்டினைத், தானே எடுத்துரைத்துப் பேசுவது, நெடுமொழி கூறல் ஆகும். தற்புகழ்ச்சி தவறு எனினும், இது வேந்தனின் உள்ளத்தே வெற்றியுறுதியினை நிலைபெறுத்துமாதலால் தவறாகாது சிறப்பே ஆயிற்று. ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக - நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப் பிழி.மகிழ் உண்பார் பிறர். 32 நாள்தொறும் மிக்குப் பெருகுகின்ற மகிழ்வினாலே வெற்றிச் சிறப்பினையும், வீரக் கழலினையும் கொண்டு விளங்குகின்ற, யாம் விரும்பும் மன்னனே! பகை வீரராகிய படைவெள்ளம் பெருகிவருமானால், அதனை விலக்கியவனாக, யான் வாளொடும் போர்முனையினிடத்தே தங்குவேனாக பிறர் எல்லாம், நின்னால் வழங்கப்படுகின்ற பிழியப்பட்ட கள்ளின் தெளிவினை உண்டவராக, நின்னுடன் பாசறையிடத்தே தங்கி இருப்பாராக! 'யான் ஒருவனாகவே பகைவரது படையினை வென்று வருவேன்’ எனக் கூறிய மேம்பாடு இது. வெய்யோய்விரும்பப்படுபவனே. 11. பிள்ளைப் பெயர்ச்சி போர் தாங்கிப் புள் விலங்கியோனைத் தார் வேந்தன் தலையளித் தன்று. h புள்ளினது தீ நிமித்தத்தினையும் விலக்கியவனாகத் தான் சென்று போரிடுதலை மேற்கொண்டு, நிரை மீட்டுவந்த படை மறவனை, வெற்றிமாலையினை உடைய வேந்தன் தண்ணளி செய்வது, பிள்ளைப் பெயர்ச்சி ஆகும்.