பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hಲಿಟಿ.೬೬೬೬೨-೨೬೬೨೬–3 3. வஞ்சிப் படலம் (பகைவேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து, அந்நாட்டவருக்கு உரியவான ஆநிரைகளைக் கவர்ந்து வருதலாகிய 'வெட்சி என்னும் போரியல் பற்றியும், அப்படிக் கவர்ந்து போவாரை வென்று அவற்றிற்கு உரிய நாட்டவர் தம் நிரைகளை மீட்டுப் போதலாகிய கரந்தை' என்னும் போரியல் பற்றியும் முதலிரு படலங்களினும் கண்டோம். இவை, எளிதில் நடத்திப் போதற்குரிய இயங்குபொருளான ஆநிரை கவர்தலையும் மீட்டலையும் குறிக்கோளாகக் கொண்டவை. இவற்றினும், பகைவேந்தரது மண்ணினைக் கைக்கொள்ள முயல்கின்ற இயலாகிய இந்த வஞ்சிப் படலம் மிகவும் கருத்துடன் கற்பதற்கு உரியதாகும். இதன்கண் பிறரது நாட்டை அடிப்படுத்த வேண்டுமென நினைந்து போகின்றவர் வஞ்சியார் ஆதலால், தம் நாட்டின் உரிமையினைக் காப்பதற்கு அயராது போரிடும் உறுதிமிக்க மறவர்களை வெற்றிகொள்ளும் செயலினது கடுமையும், திட்டமிட்டு இயற்றலான முறைமையும் நன்கு கருத்திற்கொள்ளற்கு உரியனவாக விளங்கும். இதனைக் கருத்திற்கொண்டே இந்தப் பகுதியினைக் கற்றல் வேண்டும்) வாடா வஞ்சி வஞ்சியரவம் கூடார்ப்பிணிக்கும் குடைநிலை வாள்நிலை கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை பேராண் வஞ்சி முதுமொழி வஞ்சி - கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே ஒருதனி நிலையொடு தழிஞ்சி பாசறை - பெருவஞ் சிய்யே பெருஞ்சோற்று நிலையொடு, நல்லிசைவஞ்சியென நாட்டினர் தொகுத்த எஞ்சாச் சீர்த்தி இருபத் தொன்றும் • ‘ வஞ்சியும் வஞ்சித் துறையும் ஆகும். (3) வஞ்சித் திணையும், அதன் துறைகள் இருபதும் ஆதலைக் கூறுவது இச் சூத்திரம். வஞ்சித் திணையின் துறைகள், வஞ்சியரவம், குடைநிலை, வாள்நிலை, கொற்றவை நிலை, கொற்றவஞ்சி, கொற்றவள்ளை, பேராண்வஞ்சி, மாராய வஞ்சி, நெடுமொழிவஞ்சி, முதுமொழி வஞ்சி, உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி, கொடைவஞ்சி, குறுவஞ்சி, ஒருதனிநிலை,தழிஞ்சி,