பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பாசறை வஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்றுநிலை, நல்லிசைவஞ்சி என்னும் இருபதும் ஆம் - நாட்டினர் தொகுத்த எஞ்சாச் சீர்த்தி என்று உரைப்பதனால் இவை, அந்நாளில் போரியன் மரபாக நாட்டினரால் தொகுத்து உரைக்கப்பட்டு வழங்கிவந்தன வாதலும் தெளியப்படும். வஞ்சித் திணையின் விளக்கம் வாடா வஞ்சி தலை மலைந்து கூடார் மண் கொளல் குறித்தன்று. வாடாத வஞ்சிப்பூவின் கண்ணியினைத் தலையிலே சூடியவனாகப், பகைவரது மண்ணினைச் சென்று கைப்பற்றிக் கொள்ளலை ஒரு வேந்தன் கருதுவது, வஞ்சித் திணையாகும். - குறித்தன்று என்பதனால், அதுகுறித்து மேற்கொள்ளும் பலவகைப் படையெழுச்சியும் பிறவுமாகிற எல்லாம் இதனுள் அடங்குவனவாம். இப்படி வஞ்சிசூடிச் செல்வார்க்கு எதிர் வருவாரின் ஒழுக்கத்தைக் காஞ்சி என இந்நூல் கொள்ளுகிறது. ஆனால், ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால், அவனும் அம் மண் அழியாமற் காத்தற்கு எதிர்வருதலின், இருவருக்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாம். ஆதலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தர் எனவே தொல்காப்பியம் உரைக்கின்றது. எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே என்பது புறத்திணையியற் சூத்திரம் (62). ஆனால், இந்நூலாசிரியரோ, மண்நசைஇ என்பதனைச் சுடார் மண் கொளல் எனவும், கடிமனை காத்தல் எனவும் இருகூறாக்கி, ஒன்றை வஞ்சியெனவும், மற்றதனைக் காஞ்சி எனவும் வகுக்கின்றார்.ஆகவே இவ்வாறு இருவகையாகக் கொள்ளப்படும் மரபினையும் நாம் அறிதல் வேண்டும். 'காஞ்சி என்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலின், பெரிதும் ஆராய்ச்சிப் படும் பொதுவியற் பெயராற் கூறல் ஆகாமை உணர்க’ என, எதிர்சேரல் க்ாஞ்சி என்பவரது கருத்தினை நச்சினார்க்கினியர் மறுத்தலையும் கவனிக்க வேண்டும். ஆனாலும், போரியங்கும் மரபு இருசாராருக்கும் இருவகைத் தனிப்பட்ட தன்மையுடைய தாதலின், ஐயனாரிதனார் இருவேறாகவே வகுத்து உரைத்தனர் ᎧTᎶᏈᎢᏯᏖ. . . . செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர் வெங்கள் மகிழ்ந்து விழவமர - அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் - - குஞ்சி மலைந்தான்எங்கோ. 36