பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uoufãos"... o ocouu... _* சிவந்த கண்களையுடைய இளமைப் பருவத்து ஆனேற்றினைப்போல மிகைத்து எழுந்து, வில்லினையுடைய மறவர்கள் வெவ்விய கள்ளினை அருந்தி வில்விழலினை விரும்பா நிற்ப, அழகிய தளிரினையுடைய வஞ்சியைத் தன்னை வணங்காதவரை வணங்கச் செய்விக்கும் பொருட்டாக, எம் வேந்தனானவன், வண்டினம் ஆரவாரிக்கத் தன் தலைமயிரினிடத்தே சூடினான். - மழவிடை இளைய ஆனேறு. அது செருக்குற்று எழுந்தாற்போலத் தன் கண்கள் கோபத்தாற் சிவக்க வேந்தனும் மிகைத்து எழுந்தான் என்க. சில மறவர் வெங்கள் மகிழ்ந்து விழவமர்தல், போர் வாய்த்தது என்கின்ற பூரிப்பினாலே ஆகும். 'வணங்காரை வணக்கிய வேந்து வஞ்சி சூடினான்’ என்பதனால், அவன் அப் பகை மன்னனது நாட்டைக் கொள்ளக் கருதியது புலனாகும். குஞ்சி-ஆண்மயிர் குடுமியும் ஆம், இது, வேந்தன் போர்மேற் கொண்டு வஞ்சி சூடியதனைக் கண்டார், அதனை உரைத்ததாம். 1. வஞ்சியரவம் வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க ஒள்வாட் டானை உருத்தெழுந் தன்று. வலியினையுடைய வாரினாலே கட்டப்பெற்ற வீர முரசத்தினொடு வலிய போர்க்களிறுகளும் சேர்ந்து முழக்கமிட ஒள்ளிய வாளினைக் கொண்டோரான படைமறவர்கள், சினந்து கிளர்ந்ததனைக் குறிப்பது, வஞ்சியரவம் ஆகும். இதனை, இயங்குபடை அரவம் என்று தொல்காப்பியம் உரைக்கும். உருத்தல்-சினத்தல். - - பெளவம் பணைமுழங்கப் பற்றான்மண் பாழாக வெளவிய வஞ்சி வலம்புனையச்-செவ்வேல் ஒளிறும் படைநடுவண் ஊழித்தீ யன்ன - களிறும் களித்ததிருங் கார். - 37 கடலைப்போல வீரமுரசம் முழங்கப் பகைவரது நிலம் பாழுற்றுப் போகக் கைப்பற்றின வஞ்சிப்பூவினை வெற்றியாகப் புனைந்தனன் வேந்தன். பகைவரது குருதிக்கறையினாலே சிவந்த வேல்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கத் திரண்டு நின்ற படையினது நடுவேயிருந்து, ஊழிக்காலத்துப் பெரு நெருப்பினைப் போல எதிர்ப்பட்ட பகைவரை அழிக்கின்ற தன்மையினை உடைய களிறும், அப்பொழுது களிப்புற்றுக் கார்மேகத்தினைப் போல முழங்கா நின்றது. - -