பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் டகாஞ்சிப்படலம்-ட61 எங்கனும் பரந்தவாக நடவாநின்ற l@l-ഖങ്ങഥിങ്ങ് கொண்ட வஞ்சியாரது தானைப் பெருக்கமானது, தங்கள் நாட்டு எல்லையிற் புகுதாதபடி அருவழியைக் காஞ்சியார் காத்துநிற்பது, தழிஞ்சி ஆகும். சுரம் அருவழி - - - வஞ்சித் தழிஞ்சி இங்ங்னம் நிகழ்வதன்று என்பதனைக் கவனிக்க தம் எல்லையை வஞ்சியார் கடந்து மேல் வராதபடி தழுவிநின்றுகாஞ்சியார் காத்தலாலும்,அவரது நினைப்பிற்கேற்ப வஞ்சியார் மேல்வராது நிற்றலாலும், இது காஞ்சிக்குரியதழிஞ்சி ஆயிற்று. - . . . - குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி உலாவு முழப்பொழிகவேந்தன் - கலாவும் இனவேங்கை யன்ன இகல்வெய்யோர் காவல் புனவேய் நரலும் புழை. 63 புனத்திடத்து மூங்கில் ஒலிமுழங்கா நிற்கும் வழியானது தம்மிற் கலக்கும் இனத்தால் உயர்ந்த புலியினையொத்த மாறுபாட்டினையே விரும்புவோரான காஞ்சி மறவருடைய காவலை உடைத்தாயிருக்கின்றது. அதனால், வஞ்சிசூடிப் போர்மேற்கொண்டு வருகின்ற வேந்தன், ஏறிட்ட வில்லினை யுடைய அக் காஞ்சியார் தம் காட்டரணைக் கைக்கொள்ளுதலை விரும்பி, இயங்குகின்ற தன் முயற்சியை இனிக் கைவிடுவானாக! காஞ்சியாரது காவல் வலிமையைக் கூறி, வஞ்சிவேந்தனை மேற்செல்ல வேண்டாமெனத் தடுத்துக் காஞ்சியாரது கருத்தினைத் தழுவி நிகழுதல்பற்றி, இது காஞ்சித் தழிஞ்சி ஆயினமை காண்க. உழப்பு முயற்சி. புழைவாயில்; வழி. - 3. படை வழக்கு -1 முத் தவிர்பூண் மறவேந்தன் ஒத் தவர்க்குப் படை வழங்கின்று. முத்துகள் ஒளிவீசுகின்ற அணிகலன்களையுடைய மறப் பண்பினனான காஞ்சிவேந்தன், தம்மில் இனமொத்த போர் மறவர்கட்குப் படைக்கலன்களை வழங்குவது, படை வழக்கு ஆகும். : - - - படைவழங்கியது குறித்தலால், இத்துறை படைவழக்கு என ஆயிற்று. ஒத்தவர் என்றது, படைமறவர்க்குரிய குணமெல்லாம் ஒத்திருத்தல் பற்றி, படைக்கலன்களை அரசு சேமித்து வைத் திருப்பதும், போர்த் தொடக்கத்து வீரர்க்கு வழங்குவதுமாகிய மரபினையும் இதனாற் காணலாம்.