பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஐயங் களைந்திட்டடல்வெங்கூற் றாலிப்ப ஐயிலை எஃகம் அவைபலவும் - மொய்யிடை ஆட்கடி வெல்களிற்று அண்ணல் கொடுத்தளித்தான் வாட்குடி வன்கணவர்க்கு. 64 பூசலிடத்தே ஆளைக் கடிகின்ற போரினை வெல்லும் யானையினை உடையவனாகிய தலைவன், மறக்குடியினராகிய தறுகண்மை உடையார்க்குக், கொலைத் தொழிலினனான வெய்ய கூற்றுவன் ஐயப்பாட்டை ஒழித்து உணவு பெற்றே மென்று ஆர்த்துக் கொள்ள, வியக்கத்தக்க இலைத்தொழிலான் மிக்கவேல் முதலிய படைக்கலங்கள் பலவற்றையும் வழங்கித் தலையளி செய்தான். வாட்குடி-மறக்குடி, வன்கணவர்-தறுகண்மையினரான மறவர். ஆலித்தல்-ஆர்ப்பரித்தல். ஐ-வியப்பு. ஐயம்-ஐயப்பாடு. 'எஃகம் அவை பலவும் கொடுத்து அளித்தான்’ எனப் படைவழக்குக் கூறப்பெற்றது. 4. படை வழக்கு-2 கொடுத்த பின்னர்க் கழன்மறவர் எடுத் துரைப்பினும் அத்துறை யாகும். அரசன் படைக்கலன்களைக் கொடுத்த பின்னர், கழல் விளங்கும் காலினரான மறவர்கள், அரசன் படைகொடுத்த அதனை உயர்த்துச் சொன்னாலும், அது படைவழக்கு என்னும் துறையாகும். படை வழங்கியதனையே விதந்து கூறுதலால், இதுவும் படைவழக்கு ஆயிற்று. - - துன்னருந்துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான்-மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து. 65 கிட்டுதற்கு அரிதான வலியினையும், கட்டிய வீரக் கழலினையும் உடையரான மறவர்கள் பலரும் சூழ்ந்திருப்பவும், தனக்கு மேவும் ஒள்ளிய வாளினை, மன்னன் என் கையிடத்தே தந்தான். அங்ங்னம் கொடுத்த எம் மன்னனுக்கு, முத்தமாலை அணிந்த கொற்றக் குடையின் கீழாக இந்தப் பூமியிடமோ தங்கா நின்றது; விண்ணகத்தையும் அதன்கீழ்க் கொண்டுவர அவன் இனி விரும்புவான்போலும் ("விரும்பின், அதனையும் வென்று அளிப்பேன்’ என்பது குறிப்பு)