பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் - வெல்லுவதற்கு அரிதான போரினை யுடையானான வஞ்சி . வேந்தன்,போரிடற்குத் தன்னை அறைகூவி அழைத்ததன் பின்னர், காஞ்சியானது கொற்றவாள்,படைமுனையிடத்தேபோயினதைக் கூறுவது, வாள் செலவு ஆகும். உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை நுணங்களில் வெம்முனை நோக்கி-அணங்கிய குந்த மலியும் புரவியான், கூடாதார் வந்தபின் செல்கென்றான் வாள். 67 வேலிட்டுப் பண்ணுதல் மிகுந்த போர்க் குதிரையினை உடைய காஞ்சிவேந்தன், உலரும் புலாலினது நாற்றம் நீங்காத பிணக்கத்தையுடைய பகைவரது பாசறையிடத்தேயுள்ள,கைநிலை செறிந்த வெவ்விய பகைமையினைப் பார்த்து, பகைவர் நம்மேல் போரிடற்கு வந்த பின்னரே நம் கொற்றவாள் செல்வதாக என்று, தன் மறவர்கட்குக் கூறினான். - . . - இதனாற் காஞ்சியானின் பெருமிதமும், போராண்மையும் புலனாகும்.குரம்பை-குடிசை இதனைக் கொற்ற வாளைப் புறவீடு விட்டதாகவும் கொள்ளலாம். வஞ்சிப் படலத்தில் வரும் வாள்செலவிற்கும் இதற்குமுள்ள வேறுபாட்டை அறிதல் வேண்டும். . . . " - 7. குடை செலவு முதுகுடிமறவர் முன்னுறச்சூழக் கொதியழல் வேலோன் குடைசென்றன்று. பழைமையாகத் தொடர்ந்து வருகின்ற குடியினரான மறவர்கள் முன்னாகச் சூழ்ந்துபோகக் கொதிக்கும் அழலினை யொத்த வேலினையுடைய காஞ்சிவேந்தன், தன் குடையினைப் புறவீடுவிடுவது,குடைசெலவு ஆகும். - "கொதியழல்,' சினத்தைக் குறித்தது. வேலோனது சினம் வேலின்மேல் ஏற்றிக் கூறப்பெற்றது. - தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தானை வெம்முனை வென்றி விறல்வெய்யோன்-தம்முனை நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்றான் கூட்டிநாட் கொண்டான் வேந்து. 68 - பகைவரது நாட்டுவளம் கெடும்படியாக வெற்றி கொள்ளும் ஆற்றல் விளங்காநின்ற தேர்ப்படையினை உடையவன்; வெய்ய போர்முனையிடத்தே வெற்றியினையே கொள்ளும் கொற்றத்தை விரும்பியோன், காஞ்சி மன்னன். அவன், வஞ்சி வேந்தனுடன்