பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& ༥༠ཨཻ༔ི་ཆ༠ཆཨོཾཆམོ། རྟ། ཆ༥༦རྐྱཨོཾuut-eto 74 கொட்கு நிமிருங் குறுகுங் குடர்குடிப் பெட்ப நகும்பெயரும் பேய்மகள்-உட்கப் | புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து கனல விழிப்பவற் கண்டு. 77 பேய்மகள், அழகிய குருதிப்புனலிடத்தே புலாலிடத்துக் கிடந்து அழலநோக்கும் காஞ்சி மறவனைக் கண்டாள் அவன் அஞ்சுமாறு, அவன்முன்நின்று தான் சுழன்றாள்.நெடிதுயர்ந்தும் கூனிக் குறுகியும் காட்டினாள். குடர் மாலையினைச் சூடிக் கொண்டு தன்னுள்ளம் விரும்பச் சிரித்தும் நின்றாள். பின்னரும், அவன் அஞ்சானாதலைக் கண்டதும் அவ்விடம் விட்டுப் பெயர்ந்தும் போயினாள். . . பெயரும்’ என்றது. அவன் அச்செயல்களால் அஞ்சாது மீளவும் கனல விழித்தலால், அதுகண்டு பேய்மகள் அஞ்சியதால் என்க. சாவினும் கலங்காத வீரனது தறுகண்மை இதனாற் கூறப்பெற்றதும் காண்க . 17. தொட்ட காஞ்சி வியன் மனைவிடலைபுண் காப்பத் . துயன் முலைப்பேழ்வாய்ப்பேய் தொட்டன்று. அகன்ற இல்லினிடத்தே, தலைமகனது விழுப்புண்ணை மருந்திட்டுச் சுற்றத்தார் காத்திருப்ப, நான்ற முலையினையும் பெரிய வாயினையும் கொண்ட பேய்மகள் அங்குச் சென்று, அதனைத் தொட்டுப் பார்ப்பது, தொட்ட காஞ்சி எனப்படும். கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய் நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச்-சென்றொருத்தி ஒட்டார் படையிடந்த ஆறாப்புண் ஏந்தகலம் . தொட்டாள் பெருகத் துயில். 78 பேய்மகள் ஒருத்தி, மிக்க இருளின் கண்ணே வீரனின் மனையிடத்துச் சென்றாள் பன்கவரைக் கொன்று மேலும் வெகுண்டுமேற்செல்லும் பண்பினனான, கூரியவேலினையுடைய அவ்வீரனை நெருங்கியும் நின்றாள்; அவனைச் சினந்து நோக்கியவளாகவும் நின்றாள். அழலினை உமிழ்ந்து கொண்டிருப்பதும், பகைவரது வேற்படை பிளந்ததும், ஆறாத புண்ணை உடையதுமான அவன் மார்பினை, அவன் பேருறக்கம் கொள்ளும்படியாகத் தொடுதலையும் செய்தாள். . துயில் பெருக என்றது,உயிர்போகஎன்பதற்கு ஆறாப்புண் ஆறமாட்டாத பெரும்புண். பேய், புண்பட்டுக் கிடப்பாரை இப்படிக் கொல்வதற்கு மாற்றாகச் செய்யும் மரபுகளை அடுத்த துறையிற் காணலாம். ير. ته -