பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 18. தொடாக் காஞ்சி அடல் அஞ்சா நெடுந்தகை புண் தொடல் அஞ்சித் துடித்து நீங்கின்று. - கொலைத் தொழிலுக்கு அஞ்சாத பெரிய நிலையினை யுடைய மறவனின் புண்ணினைத் தொடுதற்கு அஞ்சிப், பேயொன்று நடுங்கிப் பெயர்ந்ததனை உரைப்பது, தொடாக் காஞ்சி ஆகும். . 'மறவனுடைய மனைவியானவள், பேயினை, அதற்குப் பகையானவற்றை ஆங்கு வைத்துக் கடிந்து, தானும் தொடாதிருத்தல் தொடாக் காஞ்சி' எனத் தொல்காப்பியர் உரைப்பர் (புறத்-24). - - ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர்தூய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி-மொய்யிணர்ப் பூப்பெய் தெரியல் நெடுந்தகைபுண் யாங்காப்பப் பேய்ப்பெண் பெயரும் வரும். - 79 செறிந்த கொத்தினையுடைய மலரிட்டுத் தொடுத்த மாலையால் நிறைந்தமேம்பாட்டினையுடைய புண்ணையாங்கள் வெண்சிறு கடுகினைத் தூவியும், நறுமணப் பொருள்களைப் புகைத்தும், பேய்க்குப்பகையாகத் தெரிந்த மலர்களைத் தூவியும், குறிஞ்சிப்பண் பலவற்றைப் பாடியும் காத்திருப்பப் பேய்ப்பெண் அஞ்சிநீங்கும்.மீளவும் எம்சோர்வைஎதிர்நோக்கிவரும்; மீளவும் அஞ்சி நீங்கும். - கொய்யாக் குறிஞ்சி-குறிஞ்சிப் பண்; இதனைப் பாடுதலால் வேலனின் அருள்தல் கிடைக்கப் பேய் நீங்கும் என்பர், ஐயவியும் நரையும் ஆய்மலரும் பேய்ப்பகை - 19. மன்னைக் காஞ்சி - வியலிடமருள விண்படர்ந்தோன் . இயல்பேத்தி அழிபிரங்கின்று. - - அகன்ற பூமியிலுள்ளார் மயங்கா நிற்பப் போரிலேபட்டு விண்ணகம் சென்றவனுடைய மறப்பண்பினைப் போற்றி, அவனது இறப்பிற்கு நொந்து வருந்துவது, மன்னைக் காஞ்சி ஆகும். இன்னன்’ எனக் கூறி, மன்னைச் சொல் பெய்து உலகினர் இரங்குதலால், மன்னைக் காஞ்சி ஆயிற்று. (தொல் புறத் சூ.24)