பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-காஞ்சிப்படலம் 73 g போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தானுமன் ஊர்க்கும் உலகிற்கும் ஒருயிர்மன்-யார்க்கும் அறந்திறந்த வாயில் அடைத்ததால் அண்ணல் .. நிறந்திறந்த நீளிலை வேல். - 80 போர்த்தொழிலைக் கடத்தற்கு ஒரு புணை போன்றவன். உயர்ந்தோர்க்குத் தானுவைப் போன்றவன்; ஊருக்கும் உலகிற்கும் ஒர் உயிரைப் போன்றவன்; எம் அண்ணலாகிய இவன் இவனது மார்பைப் பிளந்த, நீண்ட இலைத் தொழிலாற் சிறந்த பகைவரது வேற்படையானது, யாவருக்கும் அறம்பேணுதலின் பொருட்டுத் திறந்திருந்த ஒரு வாயிலையும் இப்போது அடைத்துவிட்டதே! அவன் நிறந்திறந்த வேல், அவனுயிரை அழித்ததுடன் அமையாது, அறந்திறந்த வாயிலை அடைத்தலுக்கும் ஏதுவாகிப், பின்னும் பலரது உயிரையும் போக்குதற்குக் காரணமாயிற்றே என, அதனது அறக்கொடுமையைக் கூறினர். 20.கட் காஞ்சி நறமலியும் நறுந்தாரோன் மறமைந்தர்க்கு மட்டீந்தன்று. தேன் மிகுந்த நறுமணமுள்ள, தாரினை உடையவனான காஞ்சி வேந்தன், தறுகணாளரான தன் படைமறவர்க்குக் கள்ளினை வழங்குவது, கட்காஞ்சி ஆகும். . . மட்டுகள். இதனை வழங்குதல் அவர்க்குப் போர்மறம் மிகுதற்பொருட்டு. - - ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில் மன்னன் மறவர் மகிழ்துங்கா-முன்னே படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள் - விடலைக்கு வெங்கள் விடும். . 81 - வேந்தன் மறவர்கள் களித்து ஆடத் தொடங்குவதற்கு முன்பாகத் தழைக் கற்றையான் வேய்ந்த குடிலிடத்துப் புன்கட் கிழவியானவள் பெற்ற இந்த வீரனுக்கு, வெம்மையான கள்ளினை விடாநின்றான். இனிப் பகைமுனையிலே இருப்போரான வஞ்சிமறவர்க்குத்துயிலும் ஒழிவதாக - -- - 'ಿಾನೆT6TIT முனையோர்க்குத் துயில் இனி ஒழிக’ என்றது, கள்ளின் களிப்பால் இம்மறவன் இப்போதே அவர்மேற் செல்லலும் கூடும் என்பதால். 'மன்னன்', காஞ்சி மன்னன். கள்ளினை வீரபானம் எனவும் உரைப்பர். -