பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின்_டE வெய்யதான வேலின் ೧TFG) பட்டுவிழ்ந்தான், வெற்றியை விரும்பினோனான வீரமறவன். அம்பினைப் போலப் பிறழுகின்ற பெரிய கண்களையுடைய அவனுடைய காதற் பூங்கொம்பான மனைவிக்கும், அந்த வேலே இப்போது கூற்றம் ஆயிற்றே! ஆரவாரத்தான் மிக்க கடல்சூழ்ந்த இந்த நிலவுலகத்தின்கண், கற்புடைமை என்பது மிகவும் கொடிதேகாண்! . கவ்வை-ஆரவாரம், கற்புடைமை கடிதாயது' அந்நங்கையின் உயிரைக் குடிப்பதற்கு அதுவே ஏதுவாயினதால், இச் செயலைக் கண்டோரும் அஞ்சி ஒதுங்குவராதலால், இதுவும் ஆஞ்சிக்காஞ்சி ஆயிற்று. . 23. மகட்பாற் காஞ்சி ஏந்திழையாள் தருகென்னும் வேந்தனொடு வேறுநின்றன்று. அழகிய இழைகளை உடையாளான நின் மகளை எனக்குத் தருக எனக் கேட்கும் வஞ்சி வேந்தனொடு, காஞ்சியான், வேறுபட்டு நிற்பது, மகட்பாற் காஞ்சி ஆகும். அளிய கழல்வேந்த ரம்மா வரிவை எளியளென் றெள்ளியுரைப்பிற்-குளியாவோ . பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த கண்போற் பகழி கடிது. * . . 84 அளியினையுடைய கழன்மன்னர், அழகிய திருமகளைப் போன்ற நம் அரசனது செவ்வியைக் கொள்ளுகைக்கு எளியள் என்று இகழ்ந்து பேசினால், பண்ணைப்போன்ற இன் சொல்லையும், பலவாகிய வளைகளையும் உடைய அவளது ஒளி முகத்திலே விளங்கும் கண்களைப்போன்றவடிவுடைய அம்புகள், விரையச் சென்று அப்பகை மன்னரது மார்பிடத்தே குளிக்க மாட்டாவோ? - . . . . . தன் மகளை வலிந்து கொள்ளல் எளிதென வந்த வஞ்சி வேந்தனை மறுத்துக் காஞ்சியான் உரைப்பது இது. இதனாற் சினமிகுதி உட்ையவனாக, அவன் பகைவரை அழிக்க முற்படுவான் என்பதனால், கண்போற் பகழி கடிது குறியாவோ எனக் கண்டோர் கூறினர். - 24. முனைகடி முன்னிருப்பு . மன்னர்யாரையு மறங்காற்றி முன்னிருந்த முனைகடிந்தன்று.