பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வஞ்சி வேந்தனொடு துணையாக வந்த மன்னர்கள் அனைவரையும்,அவர் மறத்தினை வெளிப்படச்செய்துபோராடி, அவரை முன்னேயிருந்த பூசற்களரியினின்றும் போக்கியது, முனைகடி முன்னிருப்பு ஆகும். - முனையினின்றும் கடியப்பட்ட முன்னிருப்பு ஆதலால், முனைகடி முன்னிருப்பு ஆயிற்று. கடிகழல வேரிக் கடைதொறும் செல்லக் கொடிமலி கொல்களிறேவித் - துடிமகிழ ஆர்த்திட்டமருள் அடையாரை அம்முனையிற் பேர்த்திட்டான் பெய்கழலி னான். 85 இட்ட வீரக்கழலினை உடையவனான காஞ்சி மன்னன், போருள் துடிப்பறை கொட்ட ஆரவாரித்தவனாக, வெற்றிக் கொடியால் மிக்க கொல்களிறுகளை ஏவி, மிகநாறும் மதுவினையுடைய மாற்றார், அரணிடத்து வாயிலிடந்தொறும் புறங்கொடுத்துப் போகும்படியாக, அவர்களை அப் போர்முனையினின்றும் அகற்றினான். - - - வேரி-கள். பகைவரை அவர் நின்ற போர்முனையினின்றும் சிதறியோடச் செய்த மறச்செயல் இதுவாகும். தொகுத்து உரைத்தல் . . . பகைத்து வஞ்சிகுடித் தன் அரண்மேற் படையெடுத்து வந்த மாற்றரசனை, அந்த அரணுக்கு உரியவன் போர் மலைந்து வென்று, தன்னிடத்தைக் காத்துக் கொள்ளுதலாகிய திணை இந்தப் பகுதியாம். இது, இருபத்திரண்டு துறைகள் கொண்டதாக நிகழும். அவை: - - - மேல்வரும் படைவரவிற்கு மிகவும் ஆற்றாத மறவனின் வெற்றியை மிகுத்துச்சொல்லும் காஞ்சியதிர்வும், காஞ்சியானின் படை சுரத்தினை வரம்பிகவாதபடி காத்தலாகிய தழிஞ்சியும்; மறவர்க்குப் படைவழங்குதலாகிய படைவழக்கும்; வழங்கிய பின்னர் அம்மறவர் தம்முடைய மறப்பண்பினை விதந்து கூறுதலாகிய அதுவும்- பகைவரை எதிர்த்துத் தம் போர் வலிமையை வெளிப்படுத்தலாகிய பெருங்காஞ்சியும் நல்ல நாளிலே வாளைப் புறவீடு விடுதலாகிய வாட்செலவும்; குடையைப் புறவீடு விடுதலாகிய குடைச் செலவும்; பகைவரை வெல்வதுபற்றி வஞ்சினம் உரைத்தலான வஞ்சினக் காஞ்சியும் -