பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆய்வுரை

  புறப்பொருள் வெண்பாமாலையும்
          தொல்காப்பியமும்
 ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் புறத்திணையியலில் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று ஏழுபுறத்திணைகளையும் அகத்திணை இயலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்று ஏழு அகத்திணைகளையும் கூறுகிறார். ஒவ்வொரு அகத்திணைக்கும் ஒவ்வொரு புறத்திணையினைத் தொடர்பு படுத்தி ஏழு அகத்திணைகளோடு ஏழு புறத்திணைகளையும் இணைப்பார்.
  
   எ.டு. "வரகை தானே பாலையது புறனே" (தொல். புறத். 73 நச்) இந்நூற்பாவில் புறத்திணையாகிய வாகையினை அகத்திணை யாகிய பாலையோடு சேர்த்துப் பேசுகிறார். இது போன்று மற்ற அகத்திணைகளும் புறத்திணைகளும் இணைத்துக் கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு புறத்திணையும் ஒவ்வோர் அகத்திணைக்குப் புறமாவது எப்படி என்று உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் விளக்கம் கூறுவர். விளக்கத்தையும் விரிவினையும் அவ்வுரைகளிற் காணலாம். புறப்பொருள் வெண்பாமாலை தொல்காப்பியத்திணைப் போலப் புறத்திணைகளை அகத்தினைகளோடு பொருத்திக் கூறவில்லை.
 தொல்காப்பியப் புறத்திணை இயலிற் கூறப்பெற்ற எழு புறத் திணைகளில் காஞ்சித் திணை ஒன்று நீங்கலாக ஏனைய ஆறு புறத்திணைகளையும் (வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண்), புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கூறியுள்ளார். 

தொல்காப்பியர் அகத்திணைகளை,

 கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
 முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல், பொருள்.அகத். 1