பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

2. புறப்பொருள் வெண்பாமாலை


  என்று ஏழாகக்கூறியுள்ளாரெனினும் இவைகளில் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையும் அன்பினைந்திணை என்றும் அகத்திணை என்றும் கூறுவர். எஞ்சிய கைக்கிளை, பெருந்திணை, ஆகிய இரண்டையும் பிற்காலத்தார் அகம் புறம் என்றனர். அவ்விரண்டு திணைகளையும் ஐயனாரிதனார் இங்கு புறத்திணைகளாகவே கொள்கின்றார். தொல்காப்பியப் புறத்திணையியலில் உள்ளதாய் புறப்பொருள் வெண்பாமாலையில் இடம் பெற்ற மேற் குறிக்கப் பெற்ற ஆறினோடு இவ்விரண்டையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் எட்டுத்திணைகளாகின்றன.
   தொல்காப்பியத்தில் ஆநிரை கவர்வது வெட்சித்திணையாகும். அங்ஙனம் கவர்ந்து செல்லப்பெற்ற ஆநிரைகளை அவைகளுக்குரியார் மீட்க வருவர். அங்ஙனம் மீட்பதனைக் கரந்தையென்பார். ஆனால் அதனை அவ்வாசிரியர் தனித் திணையாக வகுக்க வில்லை. 'வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன்" என்று தொடங்கும் தொல். புறத்திணை நூற்பா (60 நச்) வில் 'ஆரமரோட்டவ் பெயர்த்துத் தருதல்' முதலாகிய ஏழு துறைகள் ஆநிரைகளை மீட்பார்க்குரியனவாகச் சொல்லப் பெறுகின்றன. இந்நூற்பாவிற்கு முன்னர் உள்ள 'படையியங்கரவம், பாக்கத்து விரிச்சி' (58 நச்) என்ற நூற்பாவில் வரும் ஈரேழுதுறைகளும் ஆநிரைகளைக் கவர்வார்க் கும் அவைகளை மீட்பார்க்கும் பொதுவானவை என்று சிரியர் நச்சினார்க்கினியர் கொள்வர். எடுத்துக்காட்டாக "படை இயங்கரவம்" என்ற துறை ஆநிரைகளைக் கவரப்போகின்றவர்களுக்கும் உண்டு. அவைகளை மீட்கவருகின்றவர்களுக்கும் உண்டு என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். அக்கருத்தில் இப்பதினான்கையும் இருபத்தெட்டுத் துறைகளாக்கி இருபத்தெட்டு எடுத்துக் காட்டுகள் காட்டுவர். இதனைப் பார்க்குங்கால் உரையாசிரியர் கருத்துப்படி தொல்காப்பியர் ஆநிரைகளைக் கவர்வதையும் அவைகளை மீட் பதையும் வெட்சித் திணையாகக் கொண்டுள்ளார் என்பது போதரும், மீட்பதனைக் கரந்தைத்துறையாகக் கொண்டதனை (அனைக்குரி மரபினது கரந்தையன்றியும் தொல்.பொருள். புறத்.60)மேலே கண்டோம். ஆநிரைகளைக் கவர்வதனையும் மீட்பதனையும் ஒரே திணையாகக் கொள்ளாமல் இருவேறு திணைகளாகக் கொண்டால்