பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

14 புறப்பொருள் வெண்பாமாலை

காட்டுகளாக அவைகளைத் தரவில்லை. இதனை [இணைப்பு 4]ல் காணலாம். அவ்விணைப்பு பட்டியலில் 1 முதல் 7 முடிய உள்ளவை புறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைத் திணைக்குரியவை. இவைகள் வெட்சித் திணையில் உள்ள துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. வெட்சித்திணையினை வெட்சியென்றும் கரந்தையென்றும் பு. வெ மாலை ஆசிரியர் பிரித்ததனால் ஏற்பட்டதன் விளைவுதான் இவ்வேறுபாடு. அதேபோன்று அப்பட்டியலில் வரிசை எண் 13 முதல் 22வரை உள்ளவை வெட்சியில் உள்ள, துறைகளுக்கு எடுத்துக் காட்டுகளாகத் தொல்காப்பிய உரையில் உள்ளவைகள் புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியல் திணையில் அவை வருகின்றன. முன்னர்க் கூறியது போன்று தொல்காப்பியத்தில் வெட்சியில் உள்ள சில துறைகளையும் காஞ்சியில் உள்ள சில துறைகளையும் சேர்த்து ஐயனாரிதனார் பொதுவியல் திணையாக உருவாக்கியதால் இது ஏற்பட்டதாகும். அப்பட்டியலில் வரிசை எண் 8,9 ஆக உள்ளவை நொச்சிக்குரியதாக இருப்பினும் தொல்காப்பியரைப் பொருத்த மட்டில் உழிஞையும் நொச்சியும் ஒன்றே. பட்டியல் வரிசை எண் 23,24 ஆனவை புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் வெட்சியிலும் காஞ்சியிலும் சில துறைகளை எடுத்துப் 'பொதுவியல்' என்ற திணையினை உருவாக்கியதன் பயனேயாகும்.

  புறப்பொருள் வெண்பாமாலையில் 'கந்தழி' என்ற துறை உழிஞைப் படலத்திலும் பாடாண் படலத்திலும் வருகின்றது. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை இரண்டும் மாயவன் 'சோ' என்னும் அரணத்தை அழித்ததனையே சொல்கின்றன.
 "மாவுடைத்தார் மணிவண்ணன் 
  சோவுடைத்த மறநுதலின்று"(புறப்பொருள் வெண் 
                        பாமாலை 101 உழிஞை )
  "குழநேமியான் சோவெறிந்த
   விழாச்சீர் விறன்மிகுத்தன்று" (புறப்பொருள் 
                    வெண்பாமாலை 228 பாடாண்)

இவ்விரண்டு கொளுக்களுக்குரிய எடுத்துக் காட்டு வெண்பாக்களை இளம்பூரணர் தம் உரையில் கூறுகிறார். 101க்குரியதனை தொல்காப்பியம் புறத்திணை இயலில்