பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை 15 "கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' (புறத். 85 இளம்) என்ற நூற்பாவில் வரும் கந்தழிக்கு எடுத்துக்காட்டாகத் தருகிள் ஞர். 228 ஆவதாக வரும் வெண்பாவினை வழங்கியல் மருங்கில் வகைப்பட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப்பகுதி வரைவின் குங்கே (புறத். 80 இளம்) என்னும் தூற்பாவின் உரையில் ஒரு சுந்தழிக்கு எடுத்துக்காட்டா கத் தருகின்றார். புறப்பொருள் வெண்பாமாலையில் உழிஞையில் வரும் சுந்தழீக்குரிய வெண்பா விளையும் (101) பாடாணில் வரும் கந்தழிக்குரிய வெண்பாவினையும் (228) இளம்பூரணர் பாடாண் திணையில் வேறு வேறு நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகளாகக் கொடுக்கின்றார். இங்கனம் பார்க்கின் அப்பட்டியிலில் உள்ள ஏனைய வற்றிற்கும் அமைதி காண முடியும். அதனால் புறப்பொருள் வெண் பாமாலை எடுத்துக்காட்டுகள் உரையாசிரியர்களால் வேறு திணை துறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொடுக்கப் பெற்றாலும் அடிப்படையில் பெரிய வேறுபாடோ மாறுபாடோ இல்லை என்று ±ருவாறு சொல்லலாம். புறப்பொருள் வெண்பாமாலை - தொல்காப்பியம் - புறநறூறு கன்னித் தமிழின் தொன்மை நூல் தொல்காப்பியம். இவ்ளிலக் கணம் இந்த நூற்றாண்டினது என்று இன்னும் வரையறுக்கப் படவில்லை. சங்க இலக்கியங்களுக்கும் பின்னர் அந்த நூல் தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதினும் பெரும் பாலோருடைய கருத்து அவ்ளிலக்கண நூல் சங்க இலக்கியத் தீற்கு முன் தோன்றியது என்பதேயாகும். முன் என்று கொள் வோமானால் புறத்திணைக்கு இலக்கணம் கூறிய முதல் நூல் அது வாகும். புறத்திணைத் துறையமைப்பில் உள்ள புறத்தைப் பற்றிய பழமையான இலக்கியம் புறநானூறு என்பதில் ஐயமில்லை. புற