பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வுரை வகுத்தவர் வகுத்திருப்பாரேயானால் துறையின் பெயரில் மாற்றம் ஏற்படக் காரணமில்லை. [இணைப்பு 51இ) 5(ஈ)}நமக்கு உணர்த்துவன என்னவெள்றல் புறப்பொருள் வெண்பாமாலையினைப் புறநானூற் றுக்குத் திணை துறை வகுத்தவர் பின்பற்றவில்லை என்பதுதான். • [இணைப்பு 5 (உ1) புறநானூற்றில் உள்ள துழை ஒன்றினைத் தருகின்றது. அத்துறைக்கு நோான துறை புறப்பொருள் வெண் பாமாலையில் இல்லை. ஆனால் அதற்குச் சரியானதென்று சொல்லக் கூடிய துறைதொல்காப்பியத்தில் உள்ளது ' நீண்மொழி' என்ற துறை கரந்தைக்குரியதாகப் புறநானூறு தகுகின்றது. தொல்காப் பியத்தில் அதற்கு நேர் என்று சொல்லக் கூடிய துறை 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்ற துறை ஆகும். அது வஞ்சித் திணையிற் காணப்பெறுகின்றது. பிற்கால இலக்கண நூல்களில் திணை தொல் காப்பியத்தினின்றும் வேறுபட்டுக் கூறப்படுவதைப் புறப்பொருள் வெண்பாமாலையிற் காணலாம். புறப்பொருள் வெண்பாமாலையில் 'பூவைநிலை' என்ற துறை பாடாணுக்குரியது. தொல்காப்பியத்தில் வெட்சிக்குரியது. எப்படித் தொல்காப்பியத்தில் வெட்சித்திணைக் குரியதாக உள்ள பூவைநிலை என்ற துறையினைத் தொல்காப்பியத் திற்குப் பின் வந்த புறப்பொருள் வெண்பாமாலை பாடாண்டினைக் சூரியதாகக் கூறியுள்ளதோ அதைப்போலத் தொல்காப்பியத்தில் வஞ்சித்திணையில் வரும் 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்பதனை தொல்காப்பியத்திற்குப் பின்வந்த இலக்கள நூல் கரந்தைத் திணைக் குரியதாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்நூலினைப்பார்த்துப் புற நானூற்றிற்குத் திணை துறை வருத்தவர்நீண்மொழி என்ற துறையினை வருத்து அதனைக் கரந்தைத்திணையென்று கூறியிருக்க வேண்டும். நீண்மொழி என்பது தொல்காப்பியத்தில் 'வஞ்சித்திணைக் சூரிய மாராயம் பெற்ற நெடுமொழி' என்பதாக இல் ையென்றாலும் ஏதாவதொரு இலக்கண நூலில் 'கரந்தைத்தினை' 'நெடுமொழி என்ற துறை ஒன்றிருந்து அதனடிப்படையில் புறநானூற்றுக்குத் திணை துறை வருத்தவர் 287ஆவது பாட்டினைக் கரந்தைத் திணை நீண் மொழித்துறை என்று குறிப்பிட்டிருப்பார். கரந்தைத்திணையில் நீண்மொழி என்ற துறை புறப்பொருள் வெண்பாமாலையில் இல்லை. அதனால் புறநானூற்றுக்குத் திணை துறை வகுத்தவர் புறப்பொருள் வெண்பாமாலையல்லாத ஒரு இலக்கணத்தைப் பின்பற்றித் திணை